லண்டன்: ஒடிசா ரயில் விபத்தில் உயிரழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வீரர்களுடன், ஆஸ்திரேலிய அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா களமிறங்கினர். இதில் உஸ்மான் காவாஜா ரன் எதுவும் எடுக்காமல் சிராஜ் பந்துவீச்சில் அவுட்டானார்.
அடுத்து வந்த மார்னஸ் லாபுசாக்னே, டேவிட் வார்னருடன் கைகோத்து பொறுமையாக விளையாடி வருகிறார். 11 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா 26 ரன்களை சேர்த்து விளையாடி வருகிறது.
» WTC Final | “அஸ்வின் களமிறங்க மாட்டார் என நான் சொல்லவில்லையே” - கேப்டன் ரோஹித் சர்மா
» WTC Final | நீளமான பவுண்டரிகள், பவுன்ஸ் பிட்ச் - ஆஸி. வேகத்தை சமாளிக்குமா இந்திய அணி?
இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய அணி வீரர்கள், கள நடுவர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து தங்கள் இரங்கல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago