பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் | கால் இறுதி சுற்றில் ஹடாத் மியா

By செய்திப்பிரிவு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் நேற்று 7-ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஆன்ஸ் ஜபீர் 6-3, 6-1 என்ற நேர் செட்டில் 33-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் பெர்னார்டா பேராவை தோற்கடித்து முதன் முறையாக கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

கால் இறுதி சுற்றில் ஆன்ஸ் ஜபீர், 14-ம் நிலை வீராங்கனையான பிரேசிலின் பீட்ரிஸ் ஹடாத் மியாவை எதிர்கொள்கிறார். பீட்ரிஸ் ஹடாத் மியாவும் முதன்முறையாக பிரெஞ்சு ஓபனில் கால் இறுதியில் விளையாட உள்ளார். அவர், தனது 4வது சுற்றில் 3 மணி நேரம் 51 நிமிடங்கள் போராடி ஸ்பெயினின் சாரா சொரிப்ஸ் டார்மோவை 6-7 (3-7), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் 7-6(3) 7-5 7-5 என்ற செட் கணக்கில் சிலியின் நிக்கோலஸ் ஜாரியை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் நுழைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்