மும்பை: இந்தியாவின் அதிரடி முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், ஆசியாவின் மிகப் பெரிய மிடில் ஆர்டர் பேட்டர் என்று பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக்கையே விதந்தோதுகிறார். இதன் மூலம் ராகுல் திராவிட், யுவராஜ் சிங் போன்றோரை அவர் கண்டு கொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அனைத்து வடிவங்களிலும் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான அதிரடி மன்னன் சேவாக், புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு ஆசியா முழுவதும் மிக உயர்ந்த நடுத்தர-வரிசை பேட்ஸ்மேன் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் தான் என்று கூறினார்.
அதாவது சச்சினை யாரோடும் ஒப்பிட முடியாது, இவர்கள் அனைவருக்கும் மேல் தட்டில் இருக்கிறார் சச்சின் என்கிறார் சேவாக். ஒப்பிலா டெண்டுல்கர் என்கிறார். எனவே அவரை விடுத்து அதற்கும் கீழ்த்தட்டில் உள்ளவர்களையே ஒப்பிடுகிறார் சேவாக். இன்சமாம் அவரது சகாப்தத்தின் சிறந்த பேட்டர்களில் ஒருவராக இருந்தார் மேலும் இன்சமாம் உல் ஹக்கின் உயர்ந்த சாதனைகள் அதற்கு சான்றாகும் என்கிறார். இன்சமாம் உல் ஹக் 378 ஒருநாள் போட்டிகளில் 11739 ரன்களும், 120 டெஸ்ட் போட்டிகளில் 8830 ரன்களும் எடுத்துள்ளார்.
இந்நிலையில் தான் கண்டதிலேயே, நான் பார்த்ததிலே அவன் ஒருவனைத்தான் பேட்டர் என்பேன் மிடில் ஆர்டர் பேட்டர் என்பேன் என்கிறார் சேவாக்:
எல்லோரும் சச்சின் டெண்டுல்கரைக் குறிப்பிடுகிறார்கள். என்னை பொறுத்தவரையில் சிறந்த மிடில் ஆர்டர் பேட்டர் என்றால் அது இன்சமாம் உல் ஹக்தான். சச்சினுடன் யாரையும் ஒப்பிடாதீர்கள், அவர் வேறு ஒரு மட்டத்தில் இருக்கிறார். எனவே அவரை இதில் ஒப்பிட முடியாது. ஆனால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இன்சமாம் உல் ஹக்தான் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்டர். இஞ்ஜமாம் உல் ஹக்கை விட சிறந்த மிடில் ஆர்டர் பேட்டரை நான் கண்டதில்லை. அவரால் 10 ஓவர்களில் மிடில் ஆர்டரில் இறங்கி 80 ரன்களை எடுக்க முடியும்.
2003-04 காலக்கட்டங்களில் ஓவருக்கு 8 ரன்களை எடுக்க முடியும் என்பார் இன்சமாம். கவலைப்படாதே ஸ்கோர் செய்யலாம் 10 ஓவர்களில் 80 ரன்கள் ஒன்றுமில்லை என்பார் இன்சமாம். மற்ற் அணிகள் பதற்றமடையும் ஆனால் இன்சமாம் உல் ஹக் மிஸ்டர் கூல்.
2005-ல் டேனிஷ் கனேரியா எனக்கு ரவுண்ட் த விக்கெட்டில் வீசினார். என் வேகத்தைத் தடுக்க முயன்றனர். லாங் ஆனில் பீல்டரை வைத்திருந்தனர். நான் ஒன்றிரண்டு ஓவர்களை தடுப்பு முறையில் ஆடினேன். அப்போது இன்சமாமிடம் கூறினேன், ‘இன்ஜி பாய், எனக்கும் கால் வலிக்கிறது, லாங் ஆன் பீல்டரை உள்வட்டத்திற்குள் அழையுங்கள்’ என்றேன்.
அதற்கு இன்சமாம் கேட்டார், ‘சரி அவரை உள்ளே கொண்டு வந்தால் என்ன செய்வாய்?’ என்றார், நான் சிக்ஸ் அடிப்பேன் என்றேன். அவர் ஜோக் அடிக்காதே என்றார், பீல்டரை பின்னால் நிறுத்தினால் நான் சிக்சர் அடிக்க மாட்டேன் என்றேன். முன்னால் கொண்டு வா நான் சிக்சர் அடிக்கவில்லை எனில் பின்னால் கொண்டு போ என்றேன். அவர் இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டார். பீல்டரை முன்னால் கொண்டு வந்தார், கனேரியா கூக்ளி வீசினார். நான் லாங் ஆனில் சிக்ஸ் அடித்தேன். கனேரியா கடுப்பாகி விட்டார், எதற்கு பீல்டரை முன்னால் கொண்டு வந்தாய் என்று இன்சமாமிடம் கோபமாகக் கேட்டார். ஆனால் இன்சமாம், நீ பேசாமல் பவுலிங் போடு, இங்கு என்ன நடக்கிறது என்பது உனக்குத் தெரியாது என்று கனேரியாவிடம் கூறினார்.
இவ்வாறு கூறினார் சேவாக்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
25 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago