சான் ஜூவான்: பிஃபா யு-20 உலகக் கோப்பை கால்பந்து தொடர் அர்ஜெண்டினாவில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணியானது, இஸ்ரேலை எதிர்த்து விளையாடியது.
அர்ஜெண்டினாவின் சான் ஜூவான் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல்பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 56-வது நிமிடத்தில் சில்வா சான்டோஸ் உதவியுடன் பந்தை பெற்ற மார்கோஸ் லியோனார்டோ கோலாக மாற்ற பிரேசில் அணி 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்த 4 நிமிடங்களில் இஸ்ரேல் அணி பதிலடிகொடுத்தது. 60-வது நிமிடத்தில் யாம் கான்செபோல்ஸ்கியின் கிராஸை பெற்ற அனன் கலைலி தலையால் முட்டி கோல் அடிக்க ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
இதன் முதல் நிமிடத்தில் பிரேசில் கோல் அடித்தது. ஆந்த்ரே சாண்டோஸ் உதவியுடன் பந்தை பெற்ற மேத்யூஸ் நாசிமெண்டோ கோல்அடித்து அசத்த பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அடுத்த 2-வது நிமிடத்தில் இஸ்ரேலின் ஹம்ஸா ஷிப்லி பந்தை கோல் வலைக்குள் திணிக்க ஆட்டம் 2-2 என்றகோல் கணக்கில் சமன் நிலையை எட்டியது.
கூடுதல் நேரத்தின் முதல் பாதி முடியும் தருணத்தில் 105-வது நிமிடத்தில் பாக்ஸ் பகுதியின் விளிம்பில் இருந்து பந்தை பெற்ற இஸ்ரேலின் தோர் டேவிட் துர்க்மேன், பிரேசில் அணியின் இரு டிபன்டர்களை மிக நெருக்கமான சூழ்நிலையில் லாவகமாக கடந்து கோல் கம்பத்துக்குள் திணித்தார். இதனால் இஸ்ரேல் 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
கூடுதல் நேரத்தின் 2-வது பாதியில் பிரேசில் அணி மேற்கொண்டு கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போனது.அதேவேளையில் இஸ்ரேல் அணிக்கு இரு முறை பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை அந்த அணி வீணடித்தது. எனினும் இஸ்ரேல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
இதன் மூலம் பிஃபா யு-20 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் வரலாற்றில் செனகல் அணிக்கு பிறகு தனது அறிமுக தொடரிலேயே அரை இறுதிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை இஸ்ரேல் பெற்றுள்ளது. செனகல் அணி இந்த சாதனையை 2015-ம் ஆண்டு நிகழ்த்தி இருந்தது. பிஃபா நடத்தும் உலகக் கோப்பை தொடர்களில் இஸ்ரேல் அணி அரை இறுதியில் கால்பதித்துள்ளது இதுவே முதன்முறையாகும்.
இஸ்ரேல் சீனியர் அணி ஒரே ஒரு முறை மட்டுமே பிஃபா கால்பந்து தொடரில் விளையாடிஉள்ளது. அந்த அணி 1970-ல் மெக் சிகோவில்நடைபெற்ற உலகக் கோப்பையில் களமிறங்கி லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago