பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றுக்கு போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முன்னேறியுள்ளார்.
பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் நார்வேயின் காஸ்பர் ரூடும், சீன வீரர் ஜாங் ஜிசென்னும் மோதினர். இதில் காஸ்பர் ரூட் 4-6, 6-4, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் ஜாங் ஜிசென்னை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டங்களில் ஜப்பானின் யோஷிடோ நிஷியோகா, டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே, சிலி வீரர் நிக்கோலஸ் ஜாரி, அர்ஜென்டினா வீரர் தாமஸ் மார்ட்டின் எட்செவேரி உள்ளிட்டோரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் கண்டனர்.
மகளிர் 3-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை சாரா சோரிபெஸ் டோர்மோவும், கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரைபாகினாவும் மோத இருந்தனர். இதில் ஆட்டத்திலிருந்து எலீனா ரைபாகினா விலகிக் கொண்டதால், சாரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை கோகோ கவுஃப் 6-7 (5), 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவாவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவரும் போலந்து நாட்டு வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் வாங் ஜின்யுவை சாய்த்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago