லார்ட்ஸ்: அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பென் டக்கெட், ஆலி போப் ஆகியோரது அதிரடியால் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 524 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று இந்த போட்டியில் அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்டூவர்ட் பிராடு 5, ஜேக் லீச் 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஒரு விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் என்ற நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி ரன் வேட்டை நிகழ்த்தியது.
பென் டக்கெட் 178 பந்துகளில், ஒரு சிக்ஸர், 24 பவுண்டரிகளுடன் 182 ரன்கள் விளாசி ஹியூம் பந்தில் போல்டானார். ஆலி போப் 208 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 22 பவுண்டரிகளுடன் 205 ரன்கள் விளாசிய நிலையில் மேக்பிரின் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். ஜோ ரூட் 56 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் சேர்த்து மேக்பிரின் பந்தில் போல்டானார். இங்கிலாந்து அணி 82.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 524 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து 352 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை அயர்லாந்து விளையாடத் தொடங்கியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
27 mins ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago