துபாய்: வரும் 7-ம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. இரு அணி வீரர்களும் இந்தப் போட்டிக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தப் போட்டி சார்ந்து ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தப் போட்டி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணியை ரோகித் சர்மாவும், ஆஸ்திரேலிய அணியை பேட் கம்மின்ஸும் வழிநடத்துகின்றனர். இந்திய அணி கடந்த 2021-ல் நியூஸிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘தண்டாயுதம்’ (Mace) வடிவிலான பரிசை வழங்கும். இந்நிலையில், சுமார் 1 நிமிடம் ரன் டைம் கொண்ட ப்ரோமோ ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. களத்தில் இரு அணிகளின் சிறப்பான செயல்பாட்டை இந்த வீடியோ உள்ளடக்கியுள்ளது. ‘தி க்வெஸ்ட் டு தி பெஸ்ட்’ என இந்த வீடியோ நிறைவு பெறுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago