திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் நேற்று முன்தினம் சித்திரை பிரம்மோற்சவ திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பெண் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை (5-ம் தேதி) நிறைவுபெறுகிறது.
பிரம்மோற்சவ விழாவில், நாள் தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் அன்ன வாகனம், புலி வாகனம், யானை வாகனம், வெள்ளி மயில் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். கடந்த 1-ம் தேதி திருத்தேரில் சுப்பிரமணிய சுவாமி வீதியுலா சென்றார்.
இந்நிலையில், சித்திரை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய விழாவான, தெய்வானை திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு விமரிசையாக நடைபெற்றது.
» நடிகர் சரத்பாபு குறித்த வதந்தி - குடும்பத்தினர் கண்டனம்
» திவால் நடைமுறைக்கு ‘கோ ஃபர்ஸ்ட்’ நிறுவனம் விண்ணப்பம்: ரூ.6,500 கோடி கடன் இருப்பதாக தகவல்
கோயில் வளாகத்தில் உள்ள தெய்வானை திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், மேளதாளங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். அப்போது, பக்தர்கள் பட்டு வஸ்திரங்கள், மலர்கள், பழங்கள், சீர்வரிசையாக கொண்டு வந்தனர்.
கோயில் அர்ச்சகர்கள் யாகபூஜைகளுடன் தெய்வானை- முருகன் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். இதில் திருத்தணி, அரக்கோணம், ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பெண் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பெண் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மஞ்சள், குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 hour ago
ஆன்மிகம்
7 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago