மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 4-ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். பிரசித்திபெற்ற மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.23-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் சுவாமி, அம்மன் பல் வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வந்து அருள் பாலிக்கின்றனர். 4-ம் நாள் நிகழ்ச்சியாக பாண்டிய மன்னர்களின் படை சேனாதிபதிகளாக இருந்த அழகப்ப பிள்ளை - தானப்ப பிள்ளை வகையறாக் களை கவுரவிக்கும் வகையில், வில்லாபுரம் பாகற்காய் மண்டகப் படியில் எழுந்தருள்வர்.
அதன்படி நேற்று மாலை பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி மாசி வீதி வழியாக வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் எழுந்தருளினர். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய் தனர். ஏப்.30-ல் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் மே 2-ம் தேதியும், மே 3-ல் தேரோட்டமும் நடைபெறும். மே 4-ம் தேதியுடன் மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு பெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், துணை ஆணையர் ஆ.அருணாசலம் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
10 days ago