ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேச பெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகார சுவாமி கோயிலில் ராமானுஜரின் 1006-வது அவதரார திருவிழாவையொட்டி 9-ம் நாள் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில்பழமை வாய்ந்த ஆதிகேசவபெருமாள் மற்றம் ஸ்ரீபாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வருடம்தோறும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா மற்றும் ராமானுஜர் அவதார திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு 1006-வது ஆண்டு அவதார திருவிழா கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து கடந்த 8 நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில்உற்சவர் ராமானுஜர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராமானுஜர் அவதார திரு விழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம்நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா வந்த உற்சவர் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை 7 மணிக்கு கிளம்பிய தேர், காந்தி சாலை, சின்னக்கடை தெரு, திருமங்கை ஆழ்வார் தெருவழியாகச் சென்று மீண்டும்நிலைக்கு வந்தது. இந்த விழாவில்எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை,இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி உட்பட பலர் பங்கேற்றனர்.
» தன்பாலின திருமணத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க கூடாது: பார் கவுன்சில் ஆப் இந்தியா தீர்மானம்
இந்த தேர் திருவிழவையொட்டி நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம், பழங்கள், மோர், குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
10 days ago