சதுரகிரிக்கு செல்ல இன்று முதல் 4 நாட்கள் அனுமதி

By செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு இன்று முதல் ஏப்.20 வரை பக்தர்கள் செல்ல வனத் துறை அனுமதி அளித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. சித்திரை மாத அமாவாசை மற்றும் பிரதோஷ வழிபாட்டுக்காக இன்று (ஏப்.17) முதல் ஏப்.20-ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை அனுமதி அளித்துள்ளது.

சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை நுழைவாயிலில் இருந்து காலை 7 முதல் பிற்பகல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். தற்போது கோடைக் காலம் தொடங்கி உள்ளதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பக்தர்கள் வனப் பகுதிக்குள் எடுத்துச் செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் 4 நாட்களுக்கு சதுரகிரி மலையேற வனத்துறையால் அனுமதிக்கப்படுவர். மற்ற நாட்களில் பக்தர்கள் மலையேற அனுமதி கிடையாது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலையில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி சிலர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

15 hours ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்