காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்தனர்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் / திருவள்ளூர்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மக்கள் கூட்டத்தால் காஞ்சிபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் முக்கிய கோயில்களில் தேரோட்ட வைபம் நடந்தது.

காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கடந்த மார்ச் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மாலையில் சிம்ம வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்தார். இதேபோல் தினம்தோறும் சூர்யபிரபை, சந்திர பிரபை, பூதவாகனம், பவழக்கால் சப்பரம், நாக வாகனம், வெள்ளிஇடப வாகனம், வெள்ளி அதிகாரந்தி சேவை, ஸ்ரீ கைலாசபீட ராவண வாகனம், அறுபத்து மூன்று நாயன்மார்கள் திருக்கூட்டத்துடன் ஊரவலம், வெள்ளித்தேர் எனபல்வேறு வாகனங்களில் ஏகாம்பரநாதர் காலை, மாலை இரு வேளையும் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ரதோற்சவம் (மகாரதம்) எனப்படும் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் திரண்டனர். சிவபெருமானை தரிசிக்க அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. நமச்சிவாய கோஷம் விண்ணை எட்டுமளவுக்கு முழக்கமிட்டவாறு ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் எனஅனைவரும் கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ராஜவீதிகளிலும் தேர் வலம் வந்தது.

இந்த தேரோட்டத்தையொட்டி அன்னதானம், மோர் தானம், இலவச குடிநீர் விநியோகம் என பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் ஏப்ரல் 5-ம் தேதி காலை நடைபெற உள்ளது. அப்போது தங்க இடப வாகனத்தில் ஏகாம்பரநாதர் எழுந்தருளி அருள்பாளிக்கிறார்.

தேரோட்டத்தையொட்டி 4 ராஜ வீதிகளில் சாலைக்கு நடுவே இருந்ததடுப்புக் கட்டைகள் தேர் வருவதற்கு வசதியாக அகற்றப்பட்டன. தேர் வரும் நேரத்தில் மட்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதையொட்டி நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம்: இதேபோல்,திருவள்ளூர் மாவட்டத்திலும் முக்கிய கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதன்படி திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோயில்கமலத் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கமலத்தேரில் உற்சவர்வடாரண் யேஸ்வரர் எழுந்தருளினார். மாட வீதிகளில் தேர் வலம் வந்தது.

இதேபோல், வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ரத சாந்தியுடன் மகா அபிஷேகம் நடைபெற்று தாரை தப்பட்டை உடன் சங்குகள் முழங்க மகா தீபாராதனை காட்டப்பட்டு திருத்தேர் புறப்பட்டது. மாட வீதிகளில் வலம் வந்த தேர் பின்னர் நிலையை வந்தடைந்தது. இதேபோல், திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோயிலிலும் தேர்த் திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 hours ago

ஆன்மிகம்

9 hours ago

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்