ஸ்ரீ ராமநவமி விழா: கும்பகோணம் ராமசாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் ராமசாமி கோயிலில் ஸ்ரீராம நவமியையொட்டி திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

கும்பகோணம் ராமசாமி கோயில் தென்னகத்தின் அயோத்தி என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

நிகழாண்டு கடந்த 22-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இன்று ஸ்ரீ ராமநவமியான அதிகாலை 4.15 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளலும், காலை 8 மணிக்கு திருத்தேரோட்டமும் நடைபெற்றது. தேரில் சீதா ராமர் லெட்சுமணர் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

ராமா ராமா என முழக்கமிட்டபடி பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறும். 31-ம் தேதி காலை திருமஞ்சனமும், மாலை புஷ்பகயாகமும், த்வாதச ஆராதனமும், இரவு சப்தாவர்ணமும், ஏப்ரல் 1-ம் தேதி காலை ராஜ உபசார திருமஞ்சனமும், ஸ்ரீ ராமபிரானும், சீதையும் திருக்கல்யாண சேவையில் புஷ்பக விமானத்தில் வீதியுலா புறப்பாடும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் சி.மகேந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

22 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்