ஆலங்குடியில் குரு தரிசனம்

By வி.சுந்தர்ராஜ்

பாற்கடலில் அமுதம் கடைந்தபோது ஏற்பட்ட விஷத்தால் தேவர்கள் அவதிப்பட்டனர். ஆலமாகிய விஷத்தை இறைவன் குடித்துக் காத்தமையால், இவ்வூருக்கு ஆலங்குடி எனவும், இறைவனுக்கு ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது.

ஆதிசங்கரர் குரு மூர்த்தியைத் தரிசித்து சிவஞானம் பெற்ற இத்தலம், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா ஆலங்குடியில் உள்ளது. குரு பரிகாரத் தலமாக இக்கோயில் புகழ்பெற்று விளங்குகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 274-ம் இடத்தைப் பெற்றது. கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி சாலையில் தெற்கே 16-ம் கிலோமீட்டரில், நீடாமங்கலத்திலிருந்து வடக்கே ஏழாவது கிலோமீட்டரிலும் வலங்கைமானிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

குரு தட்சிணாமூர்த்தி

ஐந்து நிலைகள் உடைய ராஜகோபுரம் 80 அடி உயரத்தில் உள்ளது. முதலில், கலங்காமற்காத்த விநாயகர் காட்சி தருகிறார். மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்பாள் ஏலவார்குழலி தெற்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனர். சிறப்பு மூர்த்தியாக குரு தட்சிணாமூர்த்தி உள்ளார்.

குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்தும், 24 நெய் தீபங்கள் ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம். முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல், கொண்டைக் கடலைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன், கேஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகிக் குரு பகவான் அருள் பெறுகிறார்கள்.

வாரந்தோறும் வியாழக்கிழமையிலும், தினசரி வரும் குரு ஹோரையிலும் வழிபடலாம். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களிலும் அமாவாசை, பவுர்ணமியிலும் குரு பகவானை வழிபட்டால் சிறப்பு.

குரு லட்சார்ச்சனை விழா

குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவும், குருப்பெயர்ச்சிக்குப் பின்னதாகவும் இரண்டு கட்டங்களாக குரு லட்சார்ச்சனை விழா இங்கே நடைபெறும்.

மகா குரு வாரத்தன்று புனித நீர் கொண்டு வருதலும் பஞ்சமுகத் தீபாராதனையும், மாசி மாதக் கடைசி குரு வாரத்தன்று சங்காபிஷேகமும், விசேஷ அபிஷேக அலங்கார ஆராதனையும் நடைபெறுகிறது. தைப்பூசத்திலும் பங்குனி உத்திரத்திலும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பத்து நாள் உற்சவ விழாவும், தட்சிணாமூர்த்திக்குத் தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது. குருவைத் துணை கொண்டால் கோடி நன்மைகள் கிட்டும்.

இந்த ஆண்டு குரு பகவான் செப்டம்பர் 2-ம் தேதி காலை 9.31 மணிக்கு கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம்பெயர்ந்தார். அன்று அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. குரு தட்சிணாமூர்த்தி, தங்ககவசத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலி ஆகியோருக்குச் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்துகொள்ளலாம்.

குருப்பெயர்ச்சி செப்டம்பர் 2

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

9 hours ago

ஆன்மிகம்

22 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்