கும்பகோணம்: கும்பகோணம் ராமசாமி கோயிலில் ராமநவமியையொட்டி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
தென்னகத்தின் அயோத்தி என்றழைக்கப்படும் இக்கோயிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து நிகழாண்டு வரும் 30-ம் தேதி ராமநவமி விழாவையொட்டி கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. அங்கு சீதா, ராமர், லெட்சுமணன், ஆஞ்சநேய சுவாமிகள் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
இன்று இரவு இந்திர விமானத்தில் வீதியுலாவைத் தொடர்ந்து வரும் 29-தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. ராமநவமியான வரும் 30-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளலும், காலை 8 மணிக்கு திருத்தேரோட்டமும், இரவு 8 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் சி.மகேந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
22 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
11 days ago