அண்ணாமலையார் கோயிலில் இரு மாதங்களில் ரூ.2.81 கோடி உண்டியல் காணிக்கை

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.81 கோடியை பக்தர்கள் வழங்கி உள்ளனர்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிரிவல பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், அஷ்டலிங்க கோயில்கள், திருநேர் அண்ணாமலையார் கோயில் மற்றும் துர்க்கை அம்மன் கோயில்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட உண்டியல் வைக்கப்பட்டு, பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெறப்படுகிறது.

இவ்வாறு பெறப்படும் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படும். ஆனால், கடந்த மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்படவில்லை. இதனால், தை மற்றும் மாசி மாதத்தில் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட உண்டியல் காணிக்கை, அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று (14-ம் தேதி) எண்ணப்பட்டது.

கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காணிக்கை எண்ணும் பணி, வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. இதில் ரொக்கமாக ரூ.2,81,18,750 மற்றும் 405 கிராம் தங்கம், 2,385 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE