பங்குனிப் பெருவிழா | கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயிலில் கொடியேற்றம்

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயிலின் பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (மார்ச் 10) தொடங்கியது.

108 வைண திருத்தலங்களில் ஒன்றான இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். திருப்பணி நடைபெற்று வரும் நிலையில், நிகழாண்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி பூதேவி சமேத பொன்னப்பன் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, வரும் 17-ம் தேதி வரை பெருமான் தாயாருடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. முக்கிய விழாவான வரும் 18-ம் தேதி காலை ஸ்ரீ தேசிகனோடு தங்க ரதத்தேரோட்டம், அஹோராத்ர புஷ்கரணியில் தீர்த்தவாரியும், வரும் 19-ம் தேதி சப்தாவர்ணமும், 20-ம் தேதி விடையாற்றியும், 21-ம் தேதி உற்சவர் திருமஞ்சனமும், அன்னப்பெரும் படையல், புஷ்பயாகம் மற்றும் திருவீதியுலா நடைபெறுகிறது.

பங்குனிப் பெருவிழாவையொட்டி பூதேவி சமேத பொன்னப்பன் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் கோ.கவிதா, துணை ஆணையர் தா,உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE