சென்னை: அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. சென்னை அடையாறில் உள்ளஅனந்த பத்மநாப சுவாமி கோயிலின் 29-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
அதைத்தொடர்ந்து அனந்த பத்மநாபசுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. மாலையில்கலசஸ்தாபனம் யாகசாலையும், தீபாராதனையும், தொடர்ந்து லட்சுமி நரசிம்மர் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மார்ச் 8-ம் தேதி வரை 11நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், ஒவ்வொரு நாளும், வெவ்வேறு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான மார்ச் 2-ம் தேதிகாலை கருட சேவையும், மார்ச் 4-ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.
பின்னர், மார்ச் 6-ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். மேலும்,பிரம்மோற்சவம் நடைபெறும் அனைத்து நாட்களும் மாலையில் தர்ம பரிபாலன சபா சார்பில்இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
22 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago