மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். குரு வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். வார முன்பகுதியில் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். நண்பர்கள், உறவினர்களால் அளவோடு நலம் உண்டாகும். புதிய பொருட்கள் சேரும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிட்டும். வாரப் பின்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். பெரும்பாலும் சுபச் செலவுகளாகவே அமையும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும்.
மாதர்களது எண்ணம் ஈடேறும். திரவப் பொருட்கள் லாபம் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தலை, நரம்பு சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். குடும்பத்தில் சலசலப்புக்கள் இருந்துவரும். பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசரம் கூடாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 18 (முற்பகல்) 21, 22.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம். l எண்கள்: 1, 3, 6, 7.
பரிகாரம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 11-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பணிகளிலும், தான, தர்மப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிக மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். ஜலப் பொருட்கள் ஆதாயம் தரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருந்துவரும்.
கூட்டாகத் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தியானம், யோகாவில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத் தெளிவு கூடும். வங்கிகள், சேமிப்பு நிறுவனங்கள் மற்றும் கொடுக்கல்-வாங்கல் இனங்களால் வருவாய் கிடைக்கும். வாரப் பின்பகுதியில் சந்திரன் 12-ல் உலவும் நிலை அமைவதால் செலவுகள் அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 18 (முற்பகல்), 21, 22.
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம் l எண்கள்: 3, 6, 7.
பரிகாரம்: ஸ்ரீமகாவிஷ்ணுவை வழிபடவும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 6-ல் சனியும், 11-ல் புதனும் உலவுவதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் அனுகூலமும் உண்டாகும். பயணத்தின் மூலம் முக்கியமானதொரு எண்ணம் நிறைவேறும். தோல் பொருட்கள் லாபம் தரும். ஏற்றுமதி-இறக்குமதியில் வருவாய் கிடைக்கும். பொதுப் பணியாளர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.
வியாபாரம் வளர்ச்சி பெறும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் நோக்கம் நிறைவேறப்பெறுவார்கள். ஜலப் பொருட்கள் லாபம் தரும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதத் துறைகள் ஆக்கம் தரும். நிலபுலங்களால் ஓரளவு லாபம் கிடைக்கும். நண்பர்களும் உறவினர்களும் தக்க தருணத்தில் முன்வந்து உதவி புரிவார்கள். 12-ல் சூரியனும் செவ்வாயும் உலவுவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 21, 22.
திசைகள்: மேற்கு, வடக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, நீலம், பச்சை. l எண்கள்: 4, 5, 8.
பரிகாரம்: விநாயகரை வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும் 10-ல் புதனும் 11-ல் சூரியனும் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி காண வழி பிறக்கும். கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை துறைகள் ஆக்கம் தரும்.
உடன்பிறந்தவர்களாலும் தந்தையாலும் நலம் உண்டாகும். கேளிக்கைகளிலும் விருந்துகளிலும் ஈடுபாடு கூடும். அரசு உதவி கிடைக்கும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இனங்கள் லாபம் தரும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் இருப்பதால் சிறிய இடர்ப்பாடுகள் ஏற்படும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். விஷ பயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட தேதிகள்: மே 21, 22, 24.
திசைகள்: கிழக்கு, வடக்கு, தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, சிவப்பு, ஆரஞ்சு. l எண்கள்: 1, 5, 6, 9.
பரிகாரம்: நாகரை வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 8-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் செவ்வாயும் உலவுவது நல்லது. எதிர்ப்புக்களை முறியடிக்கும் வல்லமை உண்டாகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். பண நடமாட்டம் திருப்தி தரும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் கூடும். கேளிக்கைகளிலும் விருந்துகளிலும் ஈடுபாடு கூடும். நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.
அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். பொறியாளர்கள் நிலை உயரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். மாதர்களது எண்ணம் ஈடேறும். திடீர்ப் பொருள் வரவு உண்டாகும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 18 (முற்பகல்), 21, 22, 24.
திசைகள்: தெற்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 6, 9. l பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்யவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் 8-ல் புதனும் உலவுவது சிறப்பாகும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். எதிர்ப்புக்கள் குறையும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். ஜன்ம ராசியில் வக்கிர குரு உலவுவதால் மக்களால் மன அமைதி குறையும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் குறையும். வாழ்க்கைத் துணை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். 9-ல் சூரியனும் செவ்வாயும் உலவுவதால் தந்தை நலனில் அக்கறை தேவைப்படும். மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும்.
ராகு பலம் குறைந்திருப்பதால் பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது. வீண் செலவுகளைக் குறைத்துக்கொள்ளவும். செய்து வரும் தொழிலில் அதிக கவனம் தேவை. புதிய துறைகளில் முதலீடு செய்ய இந்த நேரம் சிறப்பானதாகாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 18 (முற்பகல்), 21, 22.
திசைகள்: மேற்கு, வடக்கு, வடமேற்கு.
நிறங்கள்: கருநீலம், மெரூன், பச்சை. l எண்கள்: 5, 7, 8.
பரிகாரம்: மகா கணபதியை வழிபடவும். துர்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago