வடபழனி கோயிலில் தைப்பூச திருவிழா: நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வடபழனி முருகன்கோயிலில், தைப்பூசம் திருவிழாகோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதற்காக நேற்று முன்தினம்அதிகாலை முதலே சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மூலவர், உற்சவருக்கு சிறப்பு சந்தனக்காப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும், நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் சிறியவர்கள், பெரியவர்கள் என ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர். இரவு 8.30 மணி அளவில் வடபழனி ஆண்டவர் 4 மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், 2-ம் நாளான நேற்றும் காலை முதல்ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடபழனி கோயிலில் குவிந்தனர்.

சுமார் 4 கிமீ தொலைவுக்கு நீண்ட வரிசையில் நின்று 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்தனர். வடபழனி ஆண்டவருக்கு ராஜ அலங்காரம், விபூதி அலங்காரம் என பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டன. நேற்றும் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

கட்டண தரிசனத்துக்காககியூஆர் கோடு வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இணையதளத்தில் ஏற்பட்ட கோளாறால் கியூஆர்கோடு சரிவர இயங்கவில்லை. இதனால் கட்டண தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் பல மணிநேரம் காத்திருக்க நேர்ந்தது. அதேசமயம் இலவச தரிசனத்தில் எளிதாக சாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்