தை மாத பவுர்ணமி வழிபாடு | சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பிப்ரவரி 3 முதல் நான்கு நாட்கள் அனுமதி

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்கு நான்கு நாட்கள் (பிப்ரவரி 3 முதல் 7- ம் தேதி வரை) பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்த 4500 அடிஉயரத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அடர்ந்த வனப்பகுதியில் கரடு முரடான பாதையில் 10 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். இங்கு மலையேறி சாமி தரிசனம் செய்ய மாதம் தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என 8 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதன்படி தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்கு பிப்ரவரி 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 6 முதல் 12 மணி வரை மலையேற அனுமதி அளிக்கப்படும். மழை பெய்தால் பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படாத என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலை பாதை மற்றும் கோயிலில் பொதுமக்கள் வசதிக்காக மருத்துவ முகாம்கள் ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE