திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் ‘தி இந்து' குழுமத்தின் ‘நான் யார் - ஸ்ரீ ரமண மகரிஷி’ நூலின் புதிய பதிப்பு வெளியீடு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் நேற்று நடைபெற்ற பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியின் 143-ம் ஆண்டு ஜெயந்தி மஹோத்ஸவ விழாவில், 'தி இந்து' குழுமத்தின் “நான் யார் - ஸ்ரீ ரமண மகரிஷி” எனும் நூலின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டது.

புதிய பதிப்பின் முதல் பிரதியை தி இந்து குழுமத்தின் துணைத் தலைவர் (விற்பனை மற்றும் விநியோகம்) ஸ்ரீதர் அர்னாலா வெளியிட, ஸ்ரீ ரமணாசிரமத்தின் தலைவர் வெங்கட் எஸ்.ரமணன், செயலாளர் சிவதாஸ் கிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு் ‘தி இந்து’ குழுமத்தின் துணைத் தலைவர் (மனித வளம்) வி.ஜெயராமன் முன்னிலை வகித்தார். இதழ் மற்றும் சிறப்பு வெளியீட்டு பிரிவுத் தலைவர் ஆர்.நிவாசன் வரவேற்றார்.

‘நான் யார் - பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி 1879-1950‘என்று தலைப்புவைக்கப்பட்டுள்ளது. 1922 டிச.28-ல் தொடங்கப்பட்ட திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாஸ்ரமத்தின் நூற்றாண்டு விழாவுடன் புதிய பதிப்பு இணைந்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய ரமணாஸ்ரமத்தின் நூற்றாண்டு விழா டிச.28, 2023 வரை தொடரும்.

192 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் பிரத்யேக கட்டுரை மற்றும் படங்கள் உள்ளன. 1950-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பகவான் ரமண மகரிஷி முக்தி அடைந்தது, ஆசிரமத்தின் 100 ஆண்டுகளின் வரலாறு, அதன் கடினமானஆரம்பம், தன்னை நிலை நிறுத்துவதற்கான அதன் போராட்டம் மற்றும் இன்று உலகம் முழுவதும் இருந்து வரும் ரமண பக்தர்களை எவ்வாறு ஈர்க்கிறது என்பது பற்றிய சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழில் ரமண மகரிஷியின் முதன்மைப் படைப்பான ‘உபதேசசாரம்‘ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

முந்தைய பதிப்பு மார்ச் 20, 2020 அன்று வெளியிடப்பட்டது. இது ரமணரின் வாழ்க்கை வரலாறு, 16 வயதில் அவரது ‘மரண அனுபவம்', அவர் எப்படி சுய விசாரணையை எழுப்பினார், மதுரையில் உள்ள தனது வீட்டை விட்டுவெளியேறியது எப்படி ஆகியவற்றை விளக்குகிறது.

மேலும், 16 வயதில், திருவண்ணாமலையை அடைந்தது, அடுத்த 54 ஆண்டுகளுக்கு கோயில்நகரத்தை விட்டு வெளியேறாத அவரை, உலகமே தேடி வந்தது,இசையமைப்பாளர் இளையராஜாவுடனான நேர்காணல்கள், ரமண மகரிஷியின் அர்ப்பணிப்பு உணர்வு உள்ள பக்தர்கள், ஓவியங்கள், ஆஸ்ரமத்தின் வேத பாடசாலை, அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலத்தின் மகிமை ஆகியவற்றை உள்ளடக்கிய தகவல்கள் இந்தப் பதிப்பில் உள்ளன.

புத்தகத்தின் அட்டை விலை ரூ. 699. https://publications.thehindugroup.com/bookstore/

என்ற இணையதளத்தில் பிரதிகளை முன்பதிவு செய்வதன் மூலம் வாசகர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு 20 சதவீத தள்ளுபடியின் சிறப்பு வெளியீட்டுச் சலுகையைப் பெறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்