கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தைப்பொங்கலன்று நடைபெறும் தைத்தேரோட்டத்தையொட்டி கொடியேற்றம் இன்று நடைபெற்றது.
கும்பகோணம் சார்ங்கபாணி கோயில் 2000 ஆண்டுகளுக்கு பழமையானதும், 108 வைணவ தலங்களில் 3-வது திவ்யதேசமாகத் திகழ்கிறது. 7 ஆழ்வார்களால் பாடப்பெற்றதும், நாலாயிர திவ்வியப்பிரபந்தம் எனும் தமிழ்ப் பாடல் தொகுப்பு கிடைக்கப் பெற்றது.
இத்தகைய சிறப்புப் பெற்ற இக்கோயிலில் ஆண்டு தோறும் தைத்தேரோட்டம் எனும் தைப்பொங்கலன்று தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு வரும் 15-ம் தேதி நடைபெறுவதை யொட்டி கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. அங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சாரங்கபாணி சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று முதல் 12-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் பல்லக்கு வீதி புறப்பாடும், 13-ம் தேதி மாலை 5 மணிக்கு சூர்ணாபிஷேகமும், 14-ம் தேதி வெண்ணெய்த்தாழி சேவையும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான வரும் 15- ம் தேதி காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் தைப்பொங்கலன்று திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் ச.சிவசங்கரி, ஊழியர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
10 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago