திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) அணில்குமார் சிங்கால் நேற்று காலை வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்னர், வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களில் மட்டுமே சொர்க்க வாசல் திறந்திருக்கும். அதன் பின்னர், அறங்காவலர் குழுவில் விவாதித்து 10 நாட்கள் வரை மட்டுமே சொர்க்க வாசலை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஆண்டும், 8 லட்சம் பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் செய்விக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக 9 இடங்களில் 90 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சர்வ தரிசனத்துக்கான இலவச டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். ஜனவரி 2-ம் தேதி அதிகாலை முதல் தரிசன டிக்கெட்டுகள் அல்லது தரிசன டோக்கன்கள் இருந்தால் மட்டுமே திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அணில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago