திருவையாறு புஷ்ப மண்டப படித்துறையில் தினமும் அன்னதானம் - தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: திருவையாறு புஷ்ப மண்டப படித்துறையில் தினமும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தருமபுரம் ஆதீனம் நேற்று தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றின் கரையில் உள்ள புஷ்ப மண்டப படித்துறைக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து, காவிரி ஆற்றில் புனித நீராடி, அருகில் உள்ள மண்டபத்தில் முன்னோருக்கு திதி கொடுத்துச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், திருவையாறுக்கு வருபவர்கள் மதியம் உணவருந்தும் விதமாக, திருவையாறு ஐயாறப்பர் இறைபணி மன்றம் மற்றும் பொதுமக்கள் சார்பில் புஷ்ப மண்டப படித்துறையில் தினமும் அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நேற்று முதல் இந்த அன்னதான நிகழ்வு தொடங்கியது. இந்நிகழ்வை தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

9 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்