திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் ஜனவரி 1-ம் தேதி இரவு முதல் 11-ம் தேதி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதற்காக நேற்று காலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் மேற்கண்ட 11 நாட்களுக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. தினமும் 20 ஆயிரம் டிக்கெட்கள் வீதம் 11 நாட்களுக்கு 2.20 லட்சம் டிக்கெட்கள் வெளியிடப்பட்டன. ஆனால், வெளியிடப்பட்ட வெறும் 32 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்தன.
வைகுண்ட ஏகாதசியான ஜனவரி 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலான சர்வ தரிசன டோக்கன்கள் திருப்பதியில் நேரடியாக பக்தர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. தினமும் 50 ஆயிரம் டோக்கன்கள் வீதம் 5 லட்சம் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
விஐபி தரிசனம் 27-ம் தேதி இல்லை: வரும் 27-ம் தேதி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை விஐபி பிரேக் தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago