ஸ்ரீ ரங்கம் கோயிலில் பகல் பத்து 2-ம் நாள் உற்சவம்

By செய்திப்பிரிவு

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, பகல் பத்து 2-ம் நாள் உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில், முத்து கிரீடம், வைர அபயஹஸ்தம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிச.22-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பகல் பத்து உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. உற்சவத்தின் 2-ம் நாளான நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, காலை 7.30 மணிக்கு அர்ச்சுன(பகல் பத்து) மண்டபத்தை அடைந்தார். அங்கு காலை 7.45 மணிக்கு அரையர் சேவை நடைபெற்றது.

பின்னர், பிற்பகல் 2 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி, வெள்ளிச்சம்பா அமுது செய்தல், மாலை 4 மணிக்கு உபயக்காரர் மரியாதை ஆகியவை நடைபெற்றன. இரவு 7 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு, இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.

இந்த புறப்பாட்டின்போது, முத்து கிரீடம், வைர அபயஹஸ்தம், பவள மாலை, அடுக்கு பதக்கம், முத்துச்சரம், அண்ட பேரண்ட பட்சி உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு நம்பெருமாள் சேவை சாதித்தார்.

பகல் பத்து உற்சவம் ஜன.1-ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து ஜன.2-ம் தேதி முதல் ஜன.11 வரை ராப்பத்து உற்சவம் நடைபெறும்.

உற்சவத்தின் முதல் நாளான ஜன.2-ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல்(பரமபத வாசல்)திறப்பு நடைபெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

46 mins ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

9 hours ago

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்