ஆன்மிகம்

திருப்பதி சொர்க்க வாசல் தரிசனத்திற்கு ரூ.10,300 டிக்கெட் இன்று வெளியீடு

செய்திப்பிரிவு

திருமலை: சாதாரண நாட்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா ரூ.10 ஆயிரம் நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு ரூ.500 கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இதற்கு பக்தர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் வரும் ஜனவரி 2-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. 11-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு பக்தர்கள் சுவாமியை தரிசித்து விட்டு சொர்க்க வாசல் வழியாக வெளியே வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 10 நாட்களில் டிக்கெட் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே திருப்பதியில் இருந்து திருமலைக்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில் சொர்க்க வாசல் தரிசனம் செய்ய ஸ்ரீ வாணி டிக்கெட்கள் ஆன்லைனில் இன்று (22-ம் தேதி) காலை 9 மணிக்கு வெளியாக உள்ளது. விருப்பமுள்ள பக்தர்கள், ரூ.10 ஆயிரம் நன்கொடையாகவும், ரூ.300 தரிசனத்திற்காகவும் செலுத்தினால், அவர்களுக்கு மகாலகு தரிசனம் (ஜெயா, விஜயா சிலை வரை மட்டும்) ஏற்பாடு செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதில் தினமும் 2,000 டிக்கெட்கள் வழங்கப்பட உள்ளது.

SCROLL FOR NEXT