நெல்லை, குற்றாலம் கோயில்களில் டிச. 28-ல் திருவாதிரை திருவிழா தொடக்கம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் மற்றும் குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோயில்களில் மார்கழி திருவாதிரை திருவிழா வரும் 28-ம் தேதி தொடங்கி ஜனவரி 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இவ்விழாவின் முதல் நாளான வரும் 28-ம் தேதி காலை 6 மணிக்குமேல் 7 மணிக்குள்ளாக கொடியேற்றம் நடைபெறுகிறது. ஜனவரி 5-ம் தேதி சுவாமி சன்னதியில் 2-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள வரலாற்று புகழ்வாய்ந்த தாமிரசபை நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை இரவு முழுக்க நடைபெறுகிறது. தாமிர சபையின் முன்புள்ள கூத்தபிரான் சந்நிதியில் பசு ஒன்று நிறுத்தப்படுகிறது. அத்துடன் ஜனவரி 6-ம் தேதி அதிகாலை 3.15 மணியளவில் தாமிரசபையில் பசு தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து 4.30 மணிவரை நடராஜர் திருநடனக் காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. இதுபோல், குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி கோயிலிலும் வரும் 28-ம் தேதி இவ்விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்