வரும் 17-ம் தேதி முதல் சுப்ரபாதத்திற்கு பதில் திருப்பாவை சேவை

By என்.மகேஷ்குமார்

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு அதிகாலை சுப்ரபாத சேவை நடத்துவது ஐதீகம். ஆனால், தமிழ் மாதமான, மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் அருளிய திருப்பாவை சேவை நடத்தப்படும். இதனையொட்டி, இம்மாதம் 16-ம் தேதி மார்கழி மாதம் தாமதமாக பிறப்பதால், மறுநாள் 17-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 14-ம் தேதி வரை திருப்பாவை சேவை நடைபெறும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும், தேவஸ்தானத்தின் ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டம் சார்பில் நாடு முழுவதிலும் உள்ள 250 வைணவ கோயில் களில் திருப்பாவை மற்றும் 12 ஆழ்வார்களின் மகிமைகள் குறித்து மார்கழி மாதம் முழுவதும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தப்படும் எனவும் அறிவிக் கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை நேற்று காலை உடுப்பி சோதே வாதிராஜா மடாதிபதியான விஸ்வ வல்லப தீர்த்த சுவாமிகள் தரிசனம் செய்தார். இவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகளை செய்து, தீர்த்த பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்