108 வைணவ திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் திருக்கார்வானம் கார்வானப் பெருமாள் கோயில், 53-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் உள்ள மற்றொரு திவ்ய தேசம் இதுவாகும்.
இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
» 108 வைணவ திவ்ய தேச உலா - 52 | திருக்காரகம் கருணாகரப் பெருமாள்
» 108 வைணவ திவ்ய தேச உலா - 51 | திருவெக்கா யதோக்தகாரி பெருமாள் கோயில்
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே (8)
(இரண்டாம் ஆயிரம் - 2058 திருநெடுந்தாண்டகம்)
மூலவர்: கார்வானப் பெருமாள், கள்வர் பெருமாள்
தாயார்: கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம்: கௌரி தீர்த்தம்
விமானம்: புஷ்கல விமானம்
மூலவர் கள்வர் பெருமாள் பிரகாரத்தில் வடக்கு நோக்கி திருமகள், பூமி தேவியுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
தலவரலாறு
திருமாலின் பல்வேறு அவதார மகிமைகளைக் கேள்விப்பட்ட பார்வதி தேவிக்கு திருமாலை கள்வன் வேடத்தில் காண வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தன் ஆசையை சிவபெருமானிடம் கூறியபோது, சிவபெருமான் “உன் பாடு உன் அண்ணன் பாடு” என்று கூறியுள்ளார். பார்வதி தேவியும் தனது சகோதரனிடம் தன் ஆசையை வெளிப்படுத்தினார்.
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் சந்நிதிக்கு வடக்கே வந்தால், பார்வதி தேவிக்கு கள்வனாக காட்சியளிப்பதாக திருமால் கூறினார். பார்வதி தேவியும் அவ்வண்ணம் வர அவர் விரும்பியபடி கள்வனாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது.
திருக்கார்வானம் – சூல் கொண்ட மேகங்கள் சூழ்ந்த அழகிய வானம். அந்த மேகங்கள் மழை பொழிவிக்குமா அல்லது காற்றடித்து கலைந்து சென்று விடுமோ…. பெருமழையாய் பூமியை நீரால் நிறைக்குமோ அல்லது சிறு தூறலிட்டு ஏமாற்றிச் சென்று விடுமோ…. பக்தி என்ற பருவம் முதிர்ந்தால் திருமாலின் அருள் எனும் பெருமழையை நம்மால் துய்க்க முடியும். அது குறைந்தால் அந்த அளவுக்கேற்ப இறைவனின் அருளும் மாறுபடும். ஆனால் இயற்கையின் அடிப்படையில் மழைக்கு இருக்கும் கூடுதல், குறைச்சல் நியதி, பெருமாள் அருளுக்கும் பொருந்துமா என்ன?
பெருமாள் தன் அருளை அனைவருக்கும் ஏற்றத் தாழ்வில்லாமல் தந்து அருள்பாலிக்கிறார். நமது முன்வினைப் பயன், இந்தப் பிறவியில் நம் பக்தி ஈடுபாடு என்ற அளவீடே அவரவருக்குத் தகுதியாக்கி அந்த அருளை கூடுதலாகவோ, குறைவாகவோ பெற முடிகிறது.
கார்வானத்து வண்ணத்தை மேனியாகக் கொண்டவன். பொதுவாக மழை பொழிந்த பின்னர் கார்வானம் தன் வண்ணத்தை துறந்து விடும். ஆனால் கார்முகில் வண்ணன் அனைவருக்கும் அருள் மழை பொழிந்த பின்னரும் தன் நிறத்தை இழப்பதில்லை. அது போல நாம் அவன்மீது கொண்ட நம் எண்ணத்தை இழக்காமல் இருந்தால், இரு வினைகளும் நம்மை விட்டு விலகி ஓடிவிடும்.
தாலேலோ வென்றாய்ச்சி தாலாட்டித் தன் முலைப்
பாலாலே யெவ்வாறு பசியாற்றினள் முன் –
மாலே பூங்கார்வானத் துள்ளாய் கடலோடும் வெற்போடும்
பார்வான முண்டாய் நீ பண்டு.
தன் குழந்தையின் பசியறிந்து முலைப்பாலால் அதன் பசியாற்றி, அது நிம்மதியாகத் தூங்க தாலாட்டுப் பாடும் ஒரு தாய் போல, கார்வானத்தாலும் தன் பக்தர்களின் தேவையறிந்து உதவக் கூடியவன் என்கிறார் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்.
கார்மேகங்கள் சூழ்ந்திருக்கும் வானத்தில் ஆட்சி புரிபவன் நீ. கடலும், மலையும் சூழ்ந்த இந்தப் பாரும் உள்ளதே. இப்படி முற்றிலுமாக இயற்கையின் பரிமாணத்தோடு விளங்கும் எந்தையே… உன் கருணை மேகம்போல், கடல் போல், மலைபோல் பரந்தது, விரிந்தது, உயர்ந்தது என்று நெகிழ்ந்து பாடுகிறார்.
சயனம் கொண்டு இந்தப் பெருமாள் உலகைப் பரிபாலிக்கவில்லை. நின்ற கோலத்திலேயே நெடுந்துயர்களை களைகிறார். உலகளந்தான் ஓங்கி உயர்ந்தபோது பிரபஞ்சமே அவன் பார்வை ஒளி பெற்று உய்வு பெற்றது போல, இந்த கார்வானத்தான் தன் நேர்கொண்ட பார்வையால் உலகோரை கவனித்து, அவர் தேவையின் அவசரம் உணர்ந்து விரைந்தோடி வரும் தோரணையில் நின்றிருக்கிறான்.
கடல் நீரை ஆவியால் ஈர்த்து மேகத்தை சூல் கொள்ள வைத்து பிறகு மழையாகப் பொழிய வைக்கும் சூரியன் போல, தம் உணர்வுகளை பக்தி ஆவியாக்கி ஞான சூல் கொண்டு கார்வானத்தின் அருள் மழை பொழிய வைத்தால் அந்தக் கருணை நம்மை மட்டுமன்றி உலகோர் அனைவரையும் போய்ச் சேரும் என்று கூறப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago