புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

By செய்திப்பிரிவு

புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு செங்கை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் காலை முதல் பக்ர்கள் திரளாக வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் வரிசையில் நின்றபடி வணங்கினர். மூலவர், உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் நடைபெற்றன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருநீர்மலை ரங்கநாத பெருமாள் மற்றும் நீர் வண்ணப் பெருமாள் கோயில், திருவிடந்தை நித்திய பெருமாள் கோயில், மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில், செங்கல்பட்டு நன்மேலி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், திருக்கழுகுன்றம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்,

பொன்விளைந்த களத்தூர் கோதண்டராம பெருமாள் கோயில், வள்ளிபுரம் ஆதிகேசவ பெருமாள் கோயில், சிங்கப்பெருமாள் கோவில் ஸ்ரீ பாடலாதிரி நரசிம்ம பெருமாள் கோயில், அஞ்சூர் வெங்கடேச பெருமாள் கோயில், திருமலை வையாவூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்,

பழைய சீவரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், சதுரங்கப்பட்டினம் மலை மண்டல பெருமாள் கோயில், அச்சிறுப்பாக்கம் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளிட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பெருமாள் கோவில்களில் பக்தர்கள் காலை முதலே வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE