பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆக.22-ம் தேதி தொடங்கியது.

நேற்று மாலை 6 மணிக்கு கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது. யானை வாகனத்தில் எழுந்தருளிய விநாயகர் வாள், வில், அம்பு, தந்தம் ஆகியவற்றுடன் கோயிலை வலம் வந்து வடக்கு கோபுரம் அருகே சூரனை வதம் செய்தார்.

ஆக.30-ம் தேதி காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் எழுந்தருளல், மாலை தேரோட்டம் நடக்கும். அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை விநாயகர் சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.

ஆக.31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் காலை தங்க மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளல், அங்குசத் தேவருக்கு தீர்த்தவாரி, பிற்பகல் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நடக்கும். இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

23 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்