துலாம்
உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் 2-ல் இருக்கிறார். செவ்வாய் 3-லும் ராகு 11-லும் உலவுவது விசேடமாகும். குடும்ப நலம் சீராகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிட்டும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். வாழ்க்கைத்துணைவரால் நலம் ஏற்படும். கூட்டாளிகள் உதவுவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். நிலபுலங்கள் சேரும். அவற்றால் வருவாயும் கிடைத்துவரும். பயணத்தால் ஒரு எண்ணம் ஈடேறும்.
பிற மொழி, மத, இனக்காரர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். செய்தொழில் விருத்தி அடையும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். ஜன்ம ராசியில் சூரியனும், 5-ல் கேதுவும், 12-ல் குருவும் இருப்பதால் மக்கள் நலனிலும் தந்தை நலனிலும் அக்கறை தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. கண், கால் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். வாரப் பின்பகுதியில் முக்கியமான எண்ணம் ஒன்று ஈடேறும். 25-ம் தேதி முதல் செவ்வாய் 4-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. அலைச்சல் அதிகமாகும். தாய் நலனில் கவனம் தேவைப்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 22, 25, 26.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: சாம்பல்நிறம், இளநீலம், சிவப்பு.
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்: குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபடவும். பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும்.
விருச்சிகம்
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். தோற்றப்பொலிவு கூடும். வாழ்க்கைத்துணைவராலும், தொழில் கூட்டாளிகளாலும் நலம் ஏற்படும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்தொழிலில் வளர்ச்சி காணலாம். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், உத்தியோகஸ்தர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவுவார்கள்.
25-ம் தேதி முதல் ராசிநாதன் செவ்வாய் 3-ம் இடத்திற்கு மாறி அதிபலம் பெறுவதால் முயற்சிகள் வெற்றி பெறும். போட்டிகளிலும், பந்தயங்களிலும், விளையாட்டுகளிலும் வெற்றி காண வாய்ப்பு உருவாகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். ஜன்ம ராசியில் சனியும் 4-ல் கேதுவும், 12-ல் சூரியன், புதனும் உலவுவதால் அதிகம் பாடுபட வேண்டிவரும். அலைச்சலால் உடல் அசதி ஏற்படும். பெற்றோர் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 25ம் 26.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம்.
எண்கள்: 3, 4, 6.
பரிகாரம்: சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது. ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும் கேட்கவும் செய்யலாம். விநாயகரை வழிபடவும்.
தனுசு
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 11-ல் சூரியனும் புதனும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். கலைஞர்கள் அளவோடு வளர்ச்சி காண்பார்கள்.
நண்பர்களாலும் உறவினர்களாலும் நலம் உண்டாகும். ஆன்மிக, அறநிலைய, ஜோதிடப் பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். ஜன்ம ராசியில் செவ்வாய் உலவுவதால் எதிலும் வேகம் கூடாது. சனி 12-ல் உலவுவதால் எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். குடும்பத்தை விட்டுச் சிலர் பிரிந்திருக்க வேண்டிவரும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். தொழிலில் இடமாற்றம் உண்டாகும். 25-ஆம் தேதி முதல் செவ்வாய் 2-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 22 (பகல்), 25, 26.
திசைகள்: வடமேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு, பச்சை, இளநீலம், வெண்மை.
எண்கள்: 1, 5, 6, 7.
பரிகாரம்: சனிப் பிரீதி செய்து கொள்ளவும். அனாதைகளுக்கும் ஏழை, எளியவர்களுக்கும், வயோதிகர்களுக்கும் உதவி செய்வது நல்லது.
மகரம்
உங்கள் ராசிக்கு 9-ல் குருவும் 10-ல் சூரியனும் புதனும் 11-ல் சுக்கிரனும் சனியும் உலவுவது சிறப்பாகும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் இடம் பெறும். முக்கியப்பதவி, பட்டங்கள் கிடைக்கும். நிர்வாகத்திறமை கூடும். பெரியவர்களும் தனவந்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு உதவுவார்கள். பண நடமாட்டம் திருப்தி தரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். வியாபாரம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.
ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் வந்து சேரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். மாதர்களது எண்ணம் நிறைவேறும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் கிடைக்கும். செவ்வாய், ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். என்றாலும் குரு பலத்தால் சமாளித்து விடுவீர்கள். பேச்சிலும் செயலிலும் வேகத்தைக் குறைத்துக் கொண்டு, விவேகத்தைக் கூட்டிக் கொள்வது நல்லது. இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாதனங்கள், வெடிப்பொருட்கள், கூரிய ஆயுதங்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது பாதுகாப்பு தேவை.
அதிர்ஷ்டமான தேதி: அக்டோபர் 22.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 5, 6, 8.
பரிகாரம்: விநாயகரையும், துர்கையையும் வழிபடவும். முருகனுக்குரிய ஸ்லோகங்களைச் சொல்வது நல்லது.
கும்பம்
உங்கள் ராசிக்கு 10-ல் சனியும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். 9-ல் புதனும் 10-ல் சுக்கிரனும் உலவுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் ஓரளவு நலம் தரும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவி புரிய முன்வருவார்கள். மக்கள் நலம் கவனிப்பின்பேரில் சீராகும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள்.
குரு 8-ல் இருப்பதால் பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகள் முளைக்கும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். 25-ஆம் தேதி முதல் செவ்வாய் 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். தொழில் ரீதியாக ஒரு மாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 22, 25, 26.
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: சிவப்பு, நீலம், பச்சை.
எண்கள்: 5, 6, 8, 9.
பரிகாரம்: நாகேஸ்வரரை வழிபடவும். குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
மீனம்
உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 7-ல் குருவும் 8-ல் புதனும் 9-ல் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் உலவுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். முன்னேற்றத்துக்கான நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு இப்போது கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி காண வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். இயந்திரப்பணியாளர்களுக்கும் இன் ஜினீயர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை உருவாகும். நிலபுலங்கள் லாபம் தரும்.
புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். 8-ல் சூரியனும் 9-ல் சனியும் இருப்பதால் தந்தை நலனில் கவனம் தேவைப்படும். அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. 25-ஆம் தேதி முதல் செவ்வாய் 11-ஆமிடம் மாறி, குருவின் பார்வையைப் பெறுவதால் செல்வ நிலை உயரும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். செந்நிறப்பொருட்கள் லாபம் தரும். காரியத்தில் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 22, 25, 26.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகைநிறம், பொன் நிறம், சிவப்பு, இளநீலம், வெண்மை .
எண்கள்: 3, 4, 5, 6, 9.
பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யவும். தந்தைக்கும் தந்தை வழி உறவினர்களுக்கும் உதவுவது நல்லது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
16 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago