வார ராசி பலன் 19-6-2014 முதல் 25-6-2014 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By சந்திரசேகர பாரதி

துலாம்

துலா ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பொருள்வரவு கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு அதிகரிக்கும்.

புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரும். மாணவர்கள் நிலைமையில் வளர்ச்சி ஏற்படும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அலைச்சலும் உழைப்பும் கூடும். 21-ம் தேதி முதல் ராகு 12-ம் இடம் மாறி, செவ்வாயுடன் கூடுவதால் பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை.

காயம்படலாம். கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். கனவு தொல்லை தரும். கேது 6-ம் இடம் மாறி, குருவின் பார்வையைப் பெறுவதால் ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 19, 22.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பச்சை, வெண்மை, இளநீலம்.

எண்கள்: 5, 6.

பரிகாரம்: துர்கையையும், சுப்பிரமணியரையும் வழிபடவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ம் இடத்தில் உலவுவது விசேடமாகும். குரு 9-லும், கேது 6-லும் இருப்பது குறிப்பிடத்தக்கது. துணிவோடும் தன்னம்பிக்கையோடும் எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றிபெறுவீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும்.

மக்களால் பெற்றோருக்கும் பெற்றோரால் மக்களுக்கும் நலம் உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். பண வரவு அதிகமாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். சூரியன், புதன், சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் தந்தை நலனிலும் வாழ்க்கைத் துணை நலனிலும் கவனம் தேவை.

வீண் செலவுகளைத் தவிர்க்கவும். 21-ம் தேதி முதல் ராகு 11-ம் இடம் மாறுவது சிறப்பாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும். 5-ம் இடத்துக்குக் கேது மாறினாலும் குரு பார்வையைப் பெறுவதால் நலமே உண்டாகும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 19, 22, 25.

திசைகள்: வடமேற்கு, தெற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், மெரூன், சிவப்பு.

எண்கள்: 3, 7, 9.

பரிகாரம்: சூரிய வழிபாடு செய்வது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் புதனும், 10-ல் செவ்வாயும் 11-ல் சனி, ராகு ஆகியோரும் உலவுவதால் வியாபார நுணுக்கம் தெரியவரும். செய்துவரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.

எழுத்து, பத்திரிகை, கணிதம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் உயருவார்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் உற்ற துணையாக இருப்பார்கள்.

பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்களால் அனுகூலம் ஏற்படும். 5-ல் கேதுவும், 6-ல் சுக்கிரனும் 7-ல் சூரியனும், 8-ல் குருவும் இருப்பதால் மக்கள் நலனில் கவனம் தேவை. உடல்நலனில் கவனம் தேவை. 21-ம் தேதி முதல் ராகு 10-ம் இடம் மாறுவது சிறப்பாகும்.

கேது 4-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. என்றாலும் கேதுவை உங்கள் ராசிநாதன் குரு பார்ப்பதால் கேதுவால் சங்கடம் ஏற்படாமல் காக்கப்படுவீர்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 19, 22, 25.

திசைகள்: தெற்கு, தென்மேற்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, பச்சை

எண்கள்: 4, 5, 8, 9.

பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்யவும். குருவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும். சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்களை வழங்கவும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும், 7-ல் குருவும், 10-ல் சனியும் ராகுவும் உலவுவது சிறப்பாகும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும்.

குடும்ப நலம் திருப்தி தரும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும்.

பொருளாதார நிலை உயரும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு செழிப்புக் கூடும். மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

21-ம் தேதி முதல் ராகு 9-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. தந்தை நலனில் கவனம் தேவைப்படும். கேது 3-ம் இடம் மாறி, குரு பார்வை பெறுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்ப்புக்கள் விலகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 19, 22, 25.

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, கறுப்பு, பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 4, 5, 6.

பரிகாரம்: விநாயகரை வழிபடவும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 4-ல் புதனும் சுக்கிரனும் உலவுவதால் மனத்தில் தெளிவு பிறக்கும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

சுகம் கூடும். புதிய பொருட்கள் சேரும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு உண்டாகும். வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு, கமிஷன் ஏஜன்ஸி துறையினர் வளர்ச்சி காண்பார்கள்.

நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். அரசு சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.

21-ம் தேதி முதல் ராகு 8-ம் இடத்துக்கும் கேது 2-ம் இடத்துக்கும் மாறுவதால் குடும்ப நலனில் கவனம் தேவைப்படும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 22, 25.

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, வ்டக்கு.

நிறங்கள்: மெரூன், பச்சை, இளநீலம், வெண்மை.

எண்கள்: 5, 6, 7.

பரிகாரம்: சுப்பிரமணியரையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி, ஆசிகளைப் பெறவும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 5-ல் குருவும் இருப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும்.

மக்கள் நலம் திருப்தி தரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் கொண்டுவரும். பிரார்த்தனைகளை நிறைவேறும். கடல், கப்பல், நீர், கடலிலிருந்து வெளிப்படும் பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். கற்பனை வளம் பெருகும். வாழ்க்கைத் துணைவரால் ஓரளவு அனுகூலம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். 21-ம் தேதி முதல் ராகு 7-ம் இடத்துக்கும் கேது ஜன்ம ராசிக்கும் இடம் மாறுவது சிறப்பாகாது. ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அதனால் மனத்தெளிவும் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 22, 25.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 3, 6.

பரிகாரம்: ராகு, கேது, சூரியன், புதன் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. கோபத்தைக் குறைத்துக்கொள்ளவும். யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்