திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தினசரி 3 ஆயிரம் பக்தர்களுக்கு விரைவில் அன்னதானம்

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தினசரி 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ராஜகோபுரம் அருகே உள்ள அன்னதான கூடத்தில் தினசரி 300 பக்தர்களுக்கு முற்பகல் 12 மணி முதல் பகல் 2 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தினசரி 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து கோயில் அதிகாரிஒருவர் கூறும்போது, “அண்ணாமலையார் கோயிலில் தினசரி 3ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. காலை 9 மணிமுதல் இரவு 9 மணி வரை அன்னதானம் வழங்கப்படும். அன்னதான கூடத்தில், ஒரே நேரத்தில் 160 பேர் அமர்ந்து சாப்பிடலாம். தினசரி 20 பந்திகள் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக நவீன சமையலறை அமைக்கப்படுகிறது.

அன்னதானம் வழங்கும் பணியில் 2 குழுக்கள் செயல்படும். காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரை ஒரு குழுவும், பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை மற்றொரு குழுவும் செயல்படும். பக்தர்கள் அன்னதான கூடத்துக்கு நேரடியாக சென்று உணவு அருந்தலாம்.

டோக்கன் வழங்கும் முறையால் குழப்பம் ஏற்படுகிறது என ‘இந்துதமிழ் திசை' நாளிதழில் சுட்டிகாட்டியதன் எதிரொலியாக, 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் திட்டம் தொடங்கும்போது, டோக்கன் வழங்கும் முறை இருக்காது. இத்திட்டம் அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

9 hours ago

ஆன்மிகம்

23 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்