முஸ்லிம்களின் வரலாற்றில் தனித்துவ மாதம் ‘முஹர்ரம்’

By செய்திப்பிரிவு

இஸ்லாமிய நாட்காட்டியில் முதலாவது மாதம் முஹர்ரம். இது முஸ்லிம்களின் வரலாற்றிலும் வாழ்க்கையிலும் செல்வாக்கு பெற்ற மாதம். முஹமது நபி (ஸல்) அவர்களும், தீர்க்கதரிசிகளும், மற்ற தூதர்களும் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்று சொல்லப்படு கிறது. எனினும், ஷீஆ முஸ்லிம்கள் இதனைத் ‘துக்கமான’ மாதம் என்கின்றனர்.

கி.மு.680-ல் கர்பாலா போரில்72 பேர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். கடைசி இறைத்தூதர் ஹளரத் முஹம்மத்(ஸல்) பேரர் ஹளரத் இமாம் ஹூசைன் கர்பாலா போரில் கொல்லப்பட்டார். அவருடன் 71 பேர் யஜீதின் ராணுவத்தினரால் முஹ்ர்ரம் மாதம் 10-வதுநாளில் கொல்லப்பட்டனர். இமாம்ஹூசைனின் 6 மாத மகன் அஸ்கரும் அந்த நாளில் கொல்லப் பட்டார்.

கர்பலா போர் என்பது ஹளரத்இமாம் ஹூசைனுக்கும் கொடுங்கோலன் கலிஃபா யஜூதுக்கும் இடையே நடந்த போர். இந்த நாளைஇமாம் ஹூசைன் உயிர்த்தியாகம் செய்த நினைவுநாளாக முஸ்லிம்கள் கருதுகின்றனர். ஆனால், ஷீஆமுஸ்லிம்கள் இதனை துக்க தினமாகக் கருதி ‘ஆஷுரா’ நாள் என்று கூறுகின்றனர்.

ஷீஆ முஸ்லிம்கள் கருத்து

முஹமது நபி (ஸல்) அவர்களின் புதல்வர் ஹளரத் இமாம் ஹூசைன்,புதல்வி ஃபாத்திமா, மருமகன் ஹளரத் அலி. இவரைத் தங்களதுமுதலாவது இமாம் அல்லது தலைவர் என்று ஷீஆக்கள் கருதுகிறார்கள். ஆனால், சன்னிகள் இவரைத்தங்களது நான்காவது கலிஃபாவாக கருதுகிறார்கள்.

இந்த வினாவுக்கு விடை தெரிய வேண்டுமானால், இஸ்லாமிய அரசு ஆட்சி புரிந்த காலத்தைப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.

முஹமது நபி (ஸல்) மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு அட்டூழியங்களையும், அடக்குமுறைகளையும் உலகம் சந்திக்கத் தொடங்கியது.

சிரியாவின் கவர்னர் யஜீது தன்னைக் கலிஃபா என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். அவர்ஊழல் புரிபவர்; சர்வாதிகாரி. ஆகவே, அவரைக் கலிஃபாவாகஇமாம் ஹூசைன் ஏற்கவில்லை.இது யஜீதுக்கு கோபத்தை உண்டாக்கியது. கலிஃபா என்ற முறையில் தன்னுடைய உத்தரவுக்கு கீழ்ப்படியாதவர்களின் தலையைத்துண்டிக்கும்படி ராணுவத்துக்குஅவர் உத்தரவிட்டார். அவரைக்கலிஃபாவாக ஏற்றுக் கொள்ளாதஇமாம் ஹூசைனுக்கும் அவரைச்சார்ந்தவர்களுக்கும் தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது என்று தன் ராணுவத்துக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நாளுக்கு நாள் அட்டூழியங்கள் அதிகரித்தன.யாரும் யஜீதிடம் சரணடையவில்லை. எல்லோரும் அவனைஎதிர்த்தார்கள். அவர்கள் எல்லோரையும் யஜீதின் ராணுவம் கொன்றது. ஆனால், ஊழல்வாதியும் கொடுங்கோலனுமான யஜீதிடம் இமாம் ஹூசைன் பணியவில்லை.

இமாம் ஹுசைனின் போதனை

இமாம் ஹூசைனின் வாழ்க்கை நமக்குப் பல பாடங்களைப் போதிக்கின்றது. அவற்றுள் முக்கியமான 5 போதனைகள் வருமாறு:

1. அவமானகரமான வாழ்க்கையை விட கண்ணியமான மரணமே மேல்.

2. பிறருடைய உரிமைகளை அறிவுறுத்தாத வரை உங்களுடைய புத்திசாலித்தனம் முழுமையானது அல்ல.

3. கொடுங்கோன்மையை ஒழித்து நேர்மையின் பக்கம் நிற்பவரே சிறந்த ஆட்சியாளராவார்.

4. எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் எப்போதும் நியாயமான வழியில் செல்லுங்கள்.

5. உன் நண்பனின் சகோதரரைப் பற்றிப் புறங்கூற வேண்டுமானால், உன்னைப் பற்றி நீ என்ன தெரிந்து கொள்ள வேண் டும் என்பதைச் சொல்லிவிடு.

கட்டுரையாளர்:

முபீன் ஃபாத்திமா புதுப்பேட்டை, சென்னை.

(இமாம் ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களது வழித்தோன்றல்களில் வந்தவர்.)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்