திருமலை: விஸ்வ விஷ்ணு சகஸ்ரநாம சமஸ்தானம் சார்பில் நாளை திருமலையில் உள்ள நாத நீராஜனம் அரங்கில் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடைபெற உள்ளது.
சென்னையைச் சேர்ந்த விஸ்வ விஷ்ணு சகஸ்ரநாம சமஸ்தானம் சார்பில், நாளை 12-வது ஆண்டாக பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் 'மழலையின் மொழியில் மாதவனின் நாமங்கள்' எனும் பெயரில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த தனியார் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் ஸ்ரீதரன் ஏற்பாட்டின்படி நடைபெறும் இந்த பாராயண நிகழ்ச்சியில் விஸ்வாஸ் அறக்கட்டளை மாணவர்கள் மட்டுமின்றி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 8 பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
நாளை 10-ம் தேதி காலை, திருமலையில் ஏழுமலையானின் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள நாத நீராஜனம் அரங்கில் இந்த நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் 9.30 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதே சமயத்தில் இந்த அறக்கட்டளையைச் சேர்ந்த 37 நாடுகளில் வசிக்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோரும் காணொலி மூலமாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago