| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |
அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 29-ம் நாளில் அத்தி வரதர் இளம் சிவப்பு நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அத்தி வரதர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளுக்காக, ஜூலை 31-ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் அத்தி வரதரை தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.
ஆகஸ்ட் 1-ம் தேதி காலை 5 மணியில் இருந்து எப்போதும் போல் பக்தர்கள் அத்தி வரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.
ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. திருக்கல்யாண வைபவம் முடிந்த பின்னர் இரவு 8 மணியில் இருந்து மீண்டும் அத்தி வரதரை பக்தர்கள் தரிசிக்கலாம். அதேபோல் ஆகஸ்ட் 15-ம் தேதி ஆடி கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளது. அன்று மாலை 5 மணிக்கு மேல் அத்தி வரதரை தரிசிக்க அனுமதி கிடையாது.
ஏற்கெனவே 2 ஐ.ஜி.க்கள், 3 டி.ஐ.ஜி.க்கள், 16 காவல் கண்காணிப்பாளர்கள், 5,100 காவலர்கள் உள்ளனர். அத்தி வரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் நாட்களில் மேலும் 3 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட உள்ளனர். வரிசையில் வரும் பக்தர்கள் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வரிசையில் செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago