| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |
அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தின் 28-வது நாளில் அத்தி வரதர் இளம் நீல நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.
விடுமுறை தினமானதால் காஞ்சியில் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்ததால் வெளியூர் வாகனங்கள் நகருக்கு வெளியே நிறுத்தப்பட்டன. 28 நாட்களில் இதுவரை 35-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா கூறியதாவது: "சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் யாரையும் திருப்பி அனுப்பவில்லை. நகருக்குள் கட்டுக்கடங்காத வகையில் வெளியூர் பக்தர்கள் கூட்டம் இருப்பதால், நெரிசலைத் தவிர்ப்பதற்காக அவர்கள் வெளியேறிய பின்னர் அனுமதிக்கப்படுவீர்கள் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
» 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்: நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைத்த போலீஸார்
» பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்: ஆவின் மூலம் பால், மோர் வழங்கும் பணி தொடக்கம்
மேலும் பக்தர்கள் வசதிக்காக கூடுதல் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
22 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
11 days ago
ஆன்மிகம்
15 days ago