| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |
அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 24-ம் நாளில் அத்தி வரதர் மஞ்சள் நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.
அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நன்கொடை கொடுக்க விரும்புபவர்கள் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் பழனிசாமி, தொலைதூரத்தில் இருந்து அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அன்னதானம் வழங்குவதற்காக தன் சொந்த பணத்தில் இருந்து ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கி அன்னதானத்துக்கு நிதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சுமார் ஒரு மணி நேரத்தில் எந்தவித நெரிசலும் இல்லாமல் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்தனர். மாலை 3 மணிக்கு மேல் 45 நிமிடங்களில் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்தனர். முதியோர் செல்லும் வழியில் 15 நிமிடத்தில் அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.
பல்வேறு இடங்களில் முறையான சோதனைகளுக்கு பிறகே முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியிலும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அத்தி வரதரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். நீர் மோர் உள்ளிட்டவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
கோயில்களில் உண்டியல் வைப்பு
கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் காணிக்கை செலுத்த விரும்புபவர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கூடுதல் உண்டியலை வைக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்தனர். அதன்படி கூடுதல் உண்டியல்கள் வைக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago