பக்தர்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் உணவு வழங்க ஏற்பாடு 

By செய்திப்பிரிவு

| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |

அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 20-ம் நாளில் அத்தி வரதர் இளம் சிவப்பு நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து பல மணி நேரம் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு உணவு மற்றும் உப்பு, சர்க்கரை கலந்த கரைசல் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொது தரிசனத்தில் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர். பலர் குழந்தைகள், உடல் நலிவுற்றவர்கள் இருப்பதால் அவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீரும் வழங்கப்படுகிறது.

கோயிலுக்கு அருகாமையில் தற்காலிக கழிப்பறைகளை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும், கோயில் வளாகத்துக்குள் நிழற்கூரைகள் அமைத்து காத்திருப்பு அறைகளை உருவாக்க வேண்டும். வரிசையில் வரும் பக்தர்கள் வெயிலில் நிற்காமல் நிழலில் இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும், இதன் மூலம் பக்தர்கள் சாலைகளில் நிற்காமல் போக்குவரத்து நெரிசலும் குறையும் என்றும் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

23 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்