காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் இடைத் தரகர்களை கட்டுப்படுத்த உத்தரவு

By செய்திப்பிரிவு

| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |

அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 16-ம் நாளில் அத்தி வரதர் இளம் சிவப்பு நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.

காவல்துறை சார்பில் பிஸ்கெட் பாக்கெட்டுகள்

பொது தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் பிஸ்கெட் பாக்கெட்டுகள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் ஆகியவை வழங்கப்பட்டன. தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் ஒரகடம் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் போலீஸார் இவற்றை வழங்கினர்.

உத்திரமேரூர் பேரூராட்சி சார்பிலும் இலவச குடிநீர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. முதியோர், கர்ப்பிணிகள், சிறிய குழந்தைகளுடன் வந்தவர்கள் தனி வரிசையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கடந்த இரு நாட்களாக எந்த சிரமமும் இன்றி அத்தி வரதரை தரிசித்தனர்.

வி.ஐ.பி. தரிசனத்தில் வரிசை

முக்கிய பிரமுகர்கள் செல்லும் தரிசனத்தில் பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டிருந்தன. அனுமதிச் சீட்டு இல்லாமல் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா பலமுறை அறிவுறுத்தியிருந்தார்.

இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திரரெட்டி கோயிலுக்கு வந்து திடீர் ஆய்வு செய்தார். அப்போது முக்கிய பிரமுகர்கள் வாயிலில் அதிக கூட்ட நெரிசல் இருப்பது குறித்து அங்குள்ள ஊழியர்களிடம் எப்படி இங்கு இவ்வளவு கூட்டம் வருகிறது என்று கேள்வி எழுப்பினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்