‘சிவசிவ’ முழக்கத்துடன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

By செய்திப்பிரிவு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவின் ஒரு பகுதியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

சைவத் தலங்களில் சிறப்பு வாய்ந்த சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலின் ஆனித் திருமஞ்சன தரிசன விழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. அதிகாலை ஸ்ரீ நடராஜர், சிவகாமி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் மேளதாளம் முழங்கிட கோயிலில் இருந்து தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ‘சிவ சிவ’ என்ற முழக்கத்துடன் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர்களுக்கு முன்னால் சிவ வாத்தியங்கள் முழங்கிட, சிவ பக்தர்கள் ஆடியபடியே சென்றனர். ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் பாடிய படியே சென்றனர். கீழ வீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி ஆகியவற்றில் கட்டளைதாரர்கள் ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ சிவகாமி அம்மனுக்கு படையல் செய்தனர். மேல வீதியும் வடக்கு வீதியும் இணையும் பகுதியில் பருவத ராஜ குல மரபினர் ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ சிவகாமி அம்மனுக்கு பாரம்பரிய வழக்கப்படி பட்டு சாத்தி படையல் செய்தனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. மாலையில் தேரிலிருந்த ஸ்ரீநடராஜர், ஸ்ரீ சிவகாமி அம்மன், ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். இரவு 7 மணிக்கு ஆயிரங்கால் மண்டப முகப்பு பகுதியில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜருக்கு லட்சார்ச்சனை நடந்தது.

இன்று ஆனித் திருமஞ்சனம்

தொடர்ந்து இன்று ஆனித் திருமஞ்சன நிகழ்வு நடைபெறுகிறது. இதையொட்டி காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜருக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் பூஜை நடைபெறுகிறது. பஞ்ச மூர்த்தி வீதியுலாவைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. நாளை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில்பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தலைமையில், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்