திருமலை: திருப்பதி பிரம்மோற்சவ விழா குறித்து நேற்று திருமலை அன்னமைய்யா பவனில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி தலைமையில் தேவஸ்தான அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தர்மா ரெட்டி பேசியதாவது:
கரோனாவால் 2 ஆண்டுகள் வரை மாட வீதிகளில் வாகன சேவை நடத்தாமல் கோயிலுக்குள் மட்டும் வாகன சேவைகள் பிரம்மோற்சவ விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் இந்த ஆண்டு பிரம்மாண்டமான முறையில் பிரம்மோற்சவம் நடத்தப்படும்.
ஏழுமலையானின் பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 9 நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில், அக்டோபர் மாதம் 1-ம் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெற உள்ளது. அன்றைய தினம் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையாகும். ஆதலால், பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும், அக்டோபர் 2-ம் தேதி தங்க ரதத்தில் சுவாமி பவனி வர உள்ளார். 3-ம் தேதி காலை தேர்த் திருவிழாவும், 4-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது.
இதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரம்மோற்சவம் தொடங்கப்படும் நாளான செப்டம்பர் மாதம் 27-ம் தேதி மாலை சுவாமிக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்க உள்ளார். மேலும் விஐபி சிபாரிசு கடிதங்கள் ஏற்பதை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என தர்மா ரெட்டி கூறினார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago