பொன் மழை பொழிந்தது

By என்.ராஜேஸ்வரி

மே 11: சங்கர ஜெயந்தி

ஆதிசங்கரர் சீடர்கள் பத்மபாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர், தோடகர். அதிசங்கரருக்கு அன்னை இட்ட பெயர் சங்கரன். ஆதிசங்கரர் நிறுவிய மதங்கள் ஆறு. ஆதிசங்கரருக்கு குரு கோவிந்த பகவத்பாதர். ஆதிசங்கரர் போதித்த தத்துவம் அத்வைதம்.

கேரளத்தில் உள்ள காலடி என்னும் இடத்தில் ஆர்யாம்பாள், சிவகுரு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார், சிவ அம்சம் எனக் கருதப்பட்டார் ஆதிசங்கரர்.

ஏன் பகவத்பாதர்?

ஆதிசங்கரர், சங்கர பகவத் பாதர் என்று அழைக்கப்பட்டார். கோவிந்த பகவத்பாதர் என்ற குருவிடம் தத்துவங்களைக் கற்றதால், இவருக்கு குருவின் பெயரில் உள்ள அடைமொழியும் வழங்கப்பட்டது.

மதத்தை ஒழித்தார்

ஆதிசங்கரர் ஷண்மதத்தை நிறுவியவர். ஆனால் இவர் ஒரு மதத்தை அழித்து ஒழித்தார். அந்த மதத்தின் பெயர் சாருவாகம். இதன் கோட்பாடுகள் சமுதாயத்தை சீரழிவுக்குக் கொண்டு சென்றுவிடும் என்று அஞ்சினார். இம்மதத்தின் கோட்பாடு ஒன்றுதான். அது கடனை வாங்கு நெய் போட்டுக் கொண்டு சாப்பிடு என்பதுதான். ஊர் முழுவதும் கடன் வாங்கி முடித்துவிட்டால், அடுத்த ஊரில் போய் கடன் வாங்குச் சாப்பிடு. இந்த அதிமோசமான கொள்கைகளைக் கொண்ட சாருவாகம் என்ற இம்மதத்தைத் தான் சங்கரர் முழுவதுமாக ஒழித்தார்.

மூன்றுக்கு விளக்கவுரை

இரண்டற்றது என்ற அத்வைதக் கொள்கை கொண்டவர் ஆதிசங்கரர். இந்து சநாதன தர்மத்தின் அடிப்படை நூல் தொகுப்புகள் மூன்று, பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை ஆகியவை. இவை மூன்றுக்கும் அத்வைதம் மூலம் விளக்கமளித்தார். இவற்றைத் தவிர செளந்தர்ய லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜகோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேக சூடாமணி, ஆத்மபோதம், கனகதாரா ஸ்தோத்திரம், சுப்பிரமணிய புஜங்கம் ஆகிய நூல்களை இயற்றி ஷண்மதத்தை போஷித்து வளர்த்தார். இதில் கனகதார ஸ்தோத்திரம் பாடியதால் மகாலஷ்மி மனம் மகிழ்ந்து தங்க நெல்லிக்கனிகளை மழையாகப் பொழிந்த்தாள்.

மடங்கள் நிறுவினார்

சங்கரர் இந்தியா முழுவதும் பயணித்து தெற்கில் சாரதா பீடம், சிருங்கேரி, மேற்கில் துவாரகா பீடம், துவாரகை, வடக்கில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம், புரி என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான அஸ்தாமலகர், சுரேஷ்வரர், பத்மபாதர் மற்றும் தோடகர் என்பவர்களை முறையே ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்