மகாராஷ்டிர மாநிலத்தில், நாசிக் மாவட்டத்திலிருக்கும் சமணத்தலம் மங்கி துங்கி. இங்கே 24 தீர்த்தங்கரர்களில் முதலாமவராகக் கருதப்படும் ரிஷபதேவரின் 108 அடி சிலை சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ பஞ்ச கல்யாண பிரதிஷ்டை சிறப்பாக நடைபெற்றது.
இந்திரன் மற்றும் இந்திராணியின் ஒப்பனையுடன் பக்தர்கள் மகாமஸ்தகாபி ஷேகத்தில் கலந்துகொண்டனர். தண்ணீர், பால் மற்றும் பழச்சாறுகளால் செய்யப்படும் அபிஷேகம் இது.
முதல் அபிஷேகம் நடக்கும்போது ‘ஜெய் ரிஷபதேவா’ என பக்தர்களின் கோஷம் வானத்தை எட்டியது. சமணர்களின் மகாமந்திரமான நமோகர் மஹாமந்திரமும் ஓதப்பட்டது. மங்கி துங்கி மலையில் ஏற இயலாத முதியவர்கள் அடிவாரத்திலிருந்தே ரிஷபதேவரைத் தரிசித்தனர்.
சமண சாஸ்திரங்களின் அடிப்படையில் தீர்த்தங்கரர்களின் சிலைகள் அமைக்கப்படுகின்றன. தீர்த்தங்கரர்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் போது, இந்திரர்கள் அவர்களுக்கு அபிஷேகம் செய்வதாக நம்பிக்கை உள்ளது. அபிஷேகம் செய்யப்படும்போது மந்திரங்கள் ஜெபிக்கப்படும். இந்த மந்திரங்கள் சிலைகளை சக்திவாய்ந்ததாக மாற்றும். உயிருள்ள தீர்த்தங்கரர்களைப் போலவே இந்த மந்திரங்களைச் சொல்வதன் மூலம் பிரார்த்தனைகளுக்கு இந்தச் சிலையுருவங்கள் பதில் தரும் என்கிறார் ரிஷபதேவர் சிலைக்கான அடித்தளம் நாட்டிய சமணப் பெண்துறவியான ஆர்யிகா கியான்மதி மாதாஜி.
மோட்சத்தின் நுழைவாயில்
இந்தச் சிலை ரிஷபநாதரின் உருவத்தைப் போலவே இருக்கவேண்டும். 108 அடி உயரத்தில் அமைக்கப்பட வேண்டும். கிழக்கு நோக்கிப் பார்ப்பதாய் அந்த சிலையுருவம் இருக்க வேண்டும் என்ற மூன்று எண்ணங்கள் அவருக்கு முதலில் தோன்றின. 1990-களில் தொடங்கிய இப்பணியில், மலையின் உச்சிக்குச் செல்லும் பாதையை அமைப்பதற்கே ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ரிஷபதேவருக்காக மலையின் ஒரு பகுதி வெட்டப்பட்டு 108 அடி உயரமுள்ள ஒற்றைப் பாறை கண்டெடுக்கப்பட்டது.
2500 அடி உயரத்தில் இருக்கும் இரட்டை மலைகளான மங்கி துங்கி என்னும் இந் சித்த க்ஷேத்திரத்தை முக்தியின் நுழைவாயிலாக சமணர்கள் கருதுகிறார்கள். சமணப் புராணங்களின் படி, ராமனும், லக்ஷ்மணனும், ஹனுமனும் மோட்சம் அடைந்த மலை இது. கிருஷ்ணரும் தனது கடைசிக் காலத்தை, மங்கி கிரியில் கழித்ததாகக் கருதப்படுகிறது. பலராமர் தனது அண்ணனுடன் இங்கே முக்தி அடைந்ததாகவும் புராணக் கதை உள்ளது.
மங்கி துங்கி மலையின் மீது நின்று ரிஷபதேவர் மோட்சத்திற்கு வழிகாட்டுகிறார்.
சித்த க்ஷேத்திரங்கள் என்றால் என்ன?
ஒரு தீர்த்தங்கரர் பிறக்கும் இடத்தையும் நிர்வாணம் அடைந்த இடத்தையும் எப்போதைக்குமான நிலைத்த தீர்த்த தலம் என்று சமணம் கருதுகிறது. தீர்த்தங்கரர்கள் பிறப்பு, தீட்சை, தவம் மற்றும் நிர்வாணம் அடையும் இடங்கள் சித்தக்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. சமணத்தைப் பொருத்தவரை ஆண்களும் பெண்களும் சமமாகவே கருதப்படுகின்றனர். அதனால் தீர்த்தங்கரர்களுக்கு அபிஷேகம் உள்ளிட்ட சடங்குகளைப் பெண்களும் செய்வார்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
10 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
12 days ago