வார ராசி பலன் 10-03-2016 முதல் 16-03-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே

சூரியன், புதன், குரு, சுக்கிரன், கேது ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். அரசு சம்பந்தமான காரியங்கள் இனிதே நிறைவேறும். பெரியவர்களும் மேலதிகாரிகளும் உதவுவார்கள். கலைத்துறையினருக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவும். பெண்களின் எண்ணம் நிறைவேறும். ஆன்மீக, அறநிலையப் பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். பிள்ளைகளாலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். வாரப் பின் பகுதியில் பணப் புழக்கம் அதிகமாகும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடி வரும். சோர்வுக்கு இடம் தர வேண்டாம். 12 ம் தேதி முதல் புதனும், 14 ம் தேதி முதல் சூரியனும் 12 ம் இடம் மாறுவது சிறப்பாகாது. வியாபாரத்தில் விழிப்பு தேவை. கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 12, 15.

திசைகள்: வடகிழக்கு, கிழக்கு, வடமேற்கு.

‎நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு, பொன் நிறம்.

எண்கள்: 1,3, 5, 6, 7. ‎

பரிகாரம்: துர்கை, ஆஞ்சநேயரை வழிபடவும்.

ரிஷப ராசி வாசகர்களே

சூரியன், புதன், கேது ஆகியோர் அனுகூலமாக இருக்கிறார்கள். அரசாங்கத்தினரால் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். நிர்வாகத் திறமையால் ஓரிரு சாதனைகளைச் செய்வீர்கள். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். முக்கியஸ்தர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். அலைச்சல் அதிகரிக்கும். என்றாலும் பயன் கிடைக்கும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டி வரும். 4 ல் ராகுவும் 7-ல் செவ்வாயும் சனியும் உலவுவதால் கெட்டவர்களுடனான தொடர்பை விடுவது அவசியம். தாய் நலனிலும் வாழ்க்கைத் துணைவரின் நலனிலும் கவனம் தேவை. 12 ம் தேதி முதல் புதனும், 14 ம் சூரியனும், 11-ம் இடம் மாறுவது விசேஷமாகும். புதிய சொத்துக்கள் சேரும். அவற்றால் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 10,11,15.

திசைகள்: வடமேற்கு, வடக்கு, கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், பச்சை.

எண்கள்: 1, 5, 7.

பரிகாரம்: ராகு, சனிக்குப் ப்ரீதி செய்து கொள்வது நல்லது.

மிதுன ராசி வாசகர்களே

செவ்வாய், சுக்கிரன், சனி, ராகுவின் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். பயணத்தின் மூலம் ஒரு எண்ணம் நிறைவேறும். 12 ம் தேதி முதல் புதனும் 14-ம் தேதி முதல் சூரியனும் 10 ம் இடம் மாறுவது சிறப்பாகும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். தகவல் தொடர்பு துறைகளால் ஆதாயம் கிடைக்கும். தந்தையாலும் உடன் பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும். குடும்ப நலனுக்காக ஓரிரு செலவுகளை மேற்கொள்வீர்கள். கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகமாகும். பெண்களின் நிலை உயரும். தொழிலதிபர்கள், உத்தியோகஸ்தர்கள், பொருள் நடமாட்டம் உள்ள இடங்களில் பணிபுரிபவர்கள் ஆகியோர் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 10, 11, 12.

திசைகள்: தென்மேற்கு, மேற்கு, தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: நீலம், புகைநிறம், சிவப்பு.

எண்கள்: 4, 6, 8, 9.

பரிகாரம்: குரு, தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்யவும்.

கடக ராசி வாசகர்களே

புதன், குரு, சுக்கிரனின் நிலை அனுகூலமாக இருப்பதால் தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு அதிகமாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். மனதிற்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பிள்ளைகளாலும் வாழ்க்கைத் துணைவராலும் நலம் உண்டாகும். தந்தை நலனில் கவனம் தேவை. அரசுப் பணியாளர்கள் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. 12 ம் தேதி முதல் புதனும், 14-ம் தேதி முதல் சூரியனும் 9 ம் இடம் மாறுவது சிறப்பாகாது. வியாபாரத்தில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்கள் அளவோடு உதவுவார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 10, 11, 15.

திசை: வடகிழக்கு, வடக்கு. தென்கிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், பச்சை, இளநீலம்.

எண்: 3, 5, 6, 9.

பரிகாரம்: நாகரை வழிபடுவது நல்லது.

சிம்ம ராசி வாசகர்களே

ஜன்ம ராசியில் உள்ள குரு 5, 7, 9-ம் இடங்களைப் பார்ப்பது சிறப்பு. 4 ல் செவ்வாய் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் ஓரளவு நலம் புரிவார். நிலபுலங்களால் அளவோடு ஆதாயம் கிடைத்து வரும். பிள்ளைகளால் நலம் உண்டாகும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். மனதில் ஏதேனும் சலனம் இருந்து வரும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண அரும்பாடுபட வேண்டி வரும். வீண் அலைச்சல் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்து ஏற்படும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கை தேவை. 12 ம் தேதி முதல் புதன் 8 ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு ஓரளவு வளர்ச்சி தெரிய வரும்.14 ம் தேதி முதல் ராசிநாதன் சூரியன் 8 ம் இடம் மாறுவது சிறப்பாகாது. உடல் நலம் பாதிக்கும். பிறரது அதிருப்திக்கு ஆளாக நேரலாம். பெற்றோர் நலனில் கவனம் தேவை. அரசுப் பணிகளில் விழிப்பு தேவை.

அதிர்ஷ்டமான தேதி: மார்ச் 15.

திசை: தெற்கு.

நிறம்: சிவப்பு.

எண்: 9.

பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிப்பது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே

சூரியன், செவ்வாய், புதன், சனி, கேது ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். நிலபுலம் சேரும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழில் லாபம் தரும். தகவல் தொடர்பு துறைகளால் வருவாய் கூடும். பொதுப் பணியாளர்கள் புகழ் பெறுவார்கள். பயணத்தின் போது விழிப்பு தேவை. 12 ம் தேதி முதல் புதனும், 14 ம் தேதி சூரியனும், 7-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. எதிர்ப்புகள் வலுவடையும் என்றாலும் சமாளிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவருக்காகச் செலவு செய்ய வேண்டி வரும். தொழில் கூட்டாளிகளால் பிரச்சினைகள் ஏற்படும். கலைத்துறையினர், பெண்களுக்கு சோதனையான காலமிது. உத்தியோகஸ்தர்கள் பொறுப்புணர்ந்து கடமையாற்றுவது அவசியம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 10, 11 (பகல்), 15.

திசைகள்: தெற்கு, மேற்கு, வட மேற்கு.

நிறங்கள்: சிவப்பு, கருநீலம், மெரூன்.

எண்கள்: 1, 5, 7, 8, 9.

பரிகாரம்: மஹாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்