துலாம் ராசி வாசகர்களே
சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலை உயரும். நல்ல தகவல் வந்து சேரும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பெண்களது எண்ணம் நிறைவேறும். பயணம் சார்ந்த இனங்கள் லாபம் தரும். வெளிநாட்டுத் தொடர்பு வலுப்பெறும். அதனால் ஆதாயமும் கிடைக்கும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். ஜன்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. 6-ம் தேதி முதல் புதன் 4-மிடம் மாறுவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காண வழி பிறக்கும். மாணவர்களது நிலை உயரும். 7-ம் தேதி முதல் குரு 11-மிடம் மாறுவதால் பொருளாதார நிலை உயரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். எதிரிகள் அடங்குவார்கள். தெய்வப் பணிகள் நிறைவேறும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 5, 7, 8, 10.
திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: இள நீலம், வெண்மை, சாம்பல் நிறம்.
எண்கள்: 4, 6.
பரிகாரம்: கேதுவுக்குப் பிரீதியாக விநாயகரை வழிபடுவது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் சூரியனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவதால் செல்வாக்கும் மதிப்பும் உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். குடும்பத்தாரால் அனுகூலம் உண்டாகும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். எதிர்பாராத பொருள் சேரும். பேச்சில் இனிமை தவழும். வாரப் பின்பகுதியில் சந்திரன் கேதுவுடன் கூடி 4-ல் உலவும் நிலை அமைவதால் சொத்துகள் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். 7-ம் தேதி முதல் குரு 10-மிடம் மாறுவதால் உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்சினைகள் சூழும். ஜன்ம ராசியில் சனியும், 12-ல் செவ்வாயும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 7, 8, 10.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், இளநீலம், பச்சை, பொன் நிறம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 4, 5, 6.
பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படிப்பது நல்லது.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசியில் சுக்கிரனும் 3-ல் கேதுவும், 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும். தந்தையால் நலம் உண்டாகும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடும் அதனால் மனத்தெளிவும் உண்டாகும். சனி 12-ல் உலவுவதால் எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். 6-ம் தேதி முதல் புதன் 2-மிடம் மாறுவதால் குடும்ப நலம் சிறக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். 7-ம் தேதி முதல் குரு 9-மிடம் மாறுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். புத்திசாலித்தனமும் தொழில்நுட்பத் திறமையும் பளிச்சிடும். செயலில் வேகம் கூடும். எதிரிகள் விலகிப் போவார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 5, 7, 8, 10.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: சிவப்பு, வெண்மை, மெரூன்.
எண்கள்: 6, 7. 9.
பரிகாரம்: சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு அதிபதி சனி லாப ஸ்தானத்தில் உலவுவது விசேடமாகும். செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். தொழிலில் வளர்ச்சி காணலாம். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். அரசுப் பணிகளில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும். 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் உலவுவதால் சிறுசிறி இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். குடும்ப நலனில் அக்கறை செலுத்த வேண்டி வரும். 7-ம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதும் சிறப்பாகாது.
வியாபாரிகளும் மாணவர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. 7-ம் தேதி முதல் குரு 8-மிடம் மாறி ராகுவுடன் கூடுவது சிறப்பாகாது. மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரலாம்; வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்:, பிப்ரவரி 7, 8, 10.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: நீலம், பொன்நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 6, 8, 9.
பரிகாரம்: நாகர் வழிபாடு செய்யவும். சூரியனுக்கும் திருமாலுக்கும் அர்ச்சனை செய்வது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன சனி 10-ல் உலவுவது சிறப்பாகும். புதன், சுக்கிரன், ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் எடுத்த காரியங்களில் எப்போடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். முக்கியமான எண்ணங்களில் சில வார முன்பகுதியில் நிறைவேறும். ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.
12-ல் சூரியன் இருப்பதால் அரசுப் பணிகளில் விழிப்புத் தேவை. நிர்வாகப் பணியாளர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். தந்தை நலனில் கவனம் தேவை. ஜன்ம ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால் கோபத்தைக் குறைத்துக்கொண்டு மற்ற்வர்களிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. 6-ம் தேதி முதல் புதன் 12-மிடம் மாறுவதால் வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. 7-ம் தேதி முதல் குரு 7-மிடம் மாறுவதால் வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும். பண நடமாட்டம் கூடும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 5, 10.
திசைகள்: மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பச்சை, நீலம்.
எண்கள்: 5, 6, 8 .
பரிகாரம் ஆதித்ய ஹ்ருதயம் வாசிக்கவும். நாகேஸ்வரரை வழிபடவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 7-ல் குருவும் 10-ல் புதனும் 11-ல் சூரியனும் உலவுவதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோர் உங்களைப் புகழுவார்கள். அரசு உதவி கிடைக்கும்.
நிர்வாகத் திறமை வெளிப்படும். 6-ம் தேதிமுதல் புதன் 11-மிடம் மாருவதால் அரசியல், நிர்வாகம், விஞ்ஞானம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். 70--ம் தேதி முதல் குரு 6-மிடம் மாறுவது சிறப்பாகாது. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். எதிலும் அவசரம் கூடாது. நிதானம் மிகவும் தேவை.
அதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி 5, 7, 8.
திசைகள்: வடக்கு, கிழக்கு, வடகிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 4, 5.
பரிகாரம்: விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடுவது நல்லது. முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
7 hours ago
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago