வார ராசி பலன் 25-2-2016 முதல் 2-3-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By சந்திரசேகர பாரதி

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 4–ல், குரு, ராகு 11–ல் உலவுவது விசேஷம். புதிய சொத்துகளும் பொருட்களும் வந்து சேரும். சுகானுபவம் உண்டாகும். கேளிக்கை உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். தனவந்தர்கள் சகாயம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்து வரும். பெரியவர்கள், சாதுக்களின் ஆசி கிடைக்கும். 5–ல் சூரியன், புதன், கேது உலவுவதால் பிள்ளைகள் நலனில் கவனம் தேவை.

அரசு பணிகளில் விழிப்புடன் ஈடுபடவும். 27–ம் தேதி முதல் செவ்வாய் 2-ம் இடம் மாறுவதால் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். வீண் வம்பு வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. வெளியூர், வெளிநாட்டு தொடர்புடன் தொழில் புரிபவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். வெளிநாட்டு பயண திட்டம் சிலருக்கு கைக்கூடும். கணவன்-மனைவி உறவு நிலை சீராக இருந்து வரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 25 (பிற்பகல்), 26, 28.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், கருப்பு.

எண்கள்: 3, 4, 6.

பரிகாரம்: கேதுவுக்கு ப்ரீதியாக விநாயகரை வழிபடவும்.



விருச்சிக ராசி வாசகர்களே

புதன், சுக்கிரன், ராகுவின் நிலை அனுகூலமாக இருப்பதால் அறிவாற்றல் பளிச்சிடும். நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். மாணவர்களது திறமை வெளிப்படும். குடும்ப நலம் சீராக இருந்து வரும். எதிர்ப்புகள் குறையும்.

புதிய பதவிகள் சிலருக்குக் கிடைக்கும். பெண்களால் நலம் உண்டாகும். 27–ம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் பிரச்சினைகள் குறையும். மதிப்பு உயரும். புதிய பொருட்கள் சேர்க்கை நிகழும். ஜன்ம ராசியில் சனியும், 4-ல் கேதுவும் இருப்பதால் உடல் நலம் அவ்வப்போது பாதிக்கும். தாய் நலனில் கவனம் தேவை. பயணத்தால் முக்கியமான காரியங்கள் சில நிறைவேறும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 25 (பிற்பகல்), 26, 28.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பச்சை, இளநீலம்.

எண்கள்: 4, 5, 6.

பரிகாரம்: சனி, கேதுவுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.



தனுசு ராசி வாசகர்களே

ராசிநாதன் குரு பலமாக இருக்கிறார். சூரியன், செவ்வாய், சுக்கிரன், கேது அனுகூலமாக உலவுகிறார்கள். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். எதிரிகள் அடங்குவார்கள். அரசாங்க பணிகள் ஆக்கம் தரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். விருந்து உபச்சாரங்களில் கலந்து கொள்வீர்கள். கலைஞர்களது நிலை உயரும்.

வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. 27–ம் தேதி முதல் செவ்வாய் 12-ம் இடம் மாறி சனியுடன் கூடுவது சிறப்பாகாது. வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். கைப் பொருளை பத்திரப் படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. இயந்திர பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. நிலபுலங்கள் விஷயத்தில் எச்சரிக்கைத் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 25 (பிற்பகல்), 26, 28.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: பொன்நிறம், வெண்மை, மெரூன், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 6, 7.

பரிகாரம்: புதன், சனிக்கு ப்ரீதி செய்வது நல்லது.



மகர ராசி வாசகர்களே

செவ்வாய், புதன், சுக்கிரன் சனியின் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் புதிய பொருட்களின் சேர்க்கைப் பெறுவீர்கள். கணவன்-மனைவி உறவு நிலை சிறப்பாக இருந்து வரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கலைஞர்களுக்குப் புகழும் பொருளும் வந்து சேரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். தொழிலாளர்களது நிலை உயரும். இயந்திர பணிகள் லாபம் தரும். நிலபுலங்களின் சேர்க்கையோ அவற்றால் ஆதாயமோ பெறுவீர்கள்.

2–ல் சூரியன், கேது உலவுவதால் குடும்பத்தில் நிம்மதி குறையும். 8–ல் குருவும், ராகுவும் இருப்பதால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் எச்சரிக்கைத் தேவை. சிறு சிறு இடர்பாடுகள் அவ்வப்போது வந்து சேரும். 27–ம் தேதி முதல் செவ்வாய் 11-ம் இடம் மாறுவது விசேஷம். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 25 (பிற்பகல்), 26, 28.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு.

எண்கள்: 6, 8, 9.

பரிகாரம்: சூரியன், குரு, ராகு, கேதுவுக்கு அர்ச்சனை ஆராதனை செய்வது நல்லது.



கும்ப ராசி வாசகர்களே

குரு, சுக்கிரன், சனி ஆகியோர் சாதகமாக உலவுகிறார்கள். நல்லவர்களின் நட்பும், அதனால் அனுகூலமும் உண்டாகும். சுபகாரியங்கள் நிகழும். உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவி வரும். பணவரவு கூடும். வாழ்க்கை வசதிகள் பெருகும். கணவன்-மனைவி உறவு நிலை சீராகும். மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ராசயன துறைகளைச் சார்ந்தவர்கள், ஆன்மீகவாதிகள் ஆகியோருக்கெல்லாம் அனுகூலமான போக்கு தென்படும். 27–ம் தேதி முதல் செவ்வாய் 10-ம் இடம் மாறுவதால் செய் தொழிலில் வளர்ச்சி காணலாம்.

வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கூடி வரும். வெளிநாட்டுத் தொடர்பு பயன் படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். நிலபுலங்களால் வருவாய் கிடைக்கும். வீட்டைப் புதுப்பிப்பீர்கள். அழகு சாதனங்களால் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதி: பிப்ரவரி 28.

திசைகள்: வடகிழக்கு, தெற்கு, மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: நீலம், பொன் நிறம்.

எண்கள்: 3, 6, 8, 9.

பரிகாரம் சூரியன், ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.



மீன ராசி வாசகர்களே

ராகு, சுக்கிரனின் நிலை சிறப்பாக இருப்பதால் நூதன பொருட்களின் சேர்க்கை நிகழும். பிற மொழி, மதக்காரர்களால் அனுகூலம் உண்டாகும். பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். ஆடை, அணிமணிகள், அலங்கார பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். குரு 6–லும், சூரியன், புதன், கேது 12- லும் இருப்பதால் உடல் நலம் பாதிக்கும். மருத்துவச் செலவுகள் கூடும்.

பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரலாம். அரசாங்கத்தாரால் பிரச்சினைகள் ஏற்படும். பொருளாதார நிலை சாதாரணமாகவே காணப்படும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்தைக் குறைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் படிப்பில் முழுகவனம் செலுத்துவது அவசியம். 27 –ம் தேதி முதல் செவ்வாய் 9 –ம் இடம் மாறுவதால், சகோதர நலம் சீராகும். தந்தை நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட தேதிகள்: பிப்ரவரி 25, 26.

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: கருப்பு, இளநீலம்.

எண்கள்: 4, 6.

பரிகாரம்: முருகனை வழிபடவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

8 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்